Monday 18 January 2010

தாய் மொழி அறிந்தவனுக்கு எந்த மொழி கற்பதுவும் எளிது-1

ஆங்கிலம் அந்நிய மொழி என்றாலும் என்னை போல் அரசாங்க பள்ளியில் தமிழ் வழி கல்வி பயின்றவர்க்கு அதன் அவசியம் புரியும் (அரசாங்க பள்ளியில் மட்டும் தான் இரண்டும் சமமாக பார்க்கப்படும் இரண்டுமே ஒழுங்கா சொல்லி தர மாட்டாங்க ) ஏன் என்றால் தாய் மொழி நன்கு கற்றறிந்தவனுக்கு எந்த மொழியை கற்பதுவும் மிகவும் எளிது அதான் ஆயிரம் பேர் ஆங்கிலம் கற்பதற்கு பதிவு எழுதிக்கொண்டு இருக்கிறார்களே உனக்கேன் இந்த வீண் வேலை அப்படின்னு நீங்க கேக்கறது எனக்கு புரியுது. ஒரே காதல் கதையை ஓராயிரம் தடவை படமா எடுத்தாலும் இந்த படத்துல வித்தியாசமா கதையை சொல்லியிருகொம்னு சொல்ற இயக்குனரை மாதிரிதான் நானும் வித்தியாசமா ஒரு கதையை சொல்லி அதன் மூலமா விளக்க முயற்சி பண்றேன் இனி கதை முதல் நாள் இன்று Today is the first day. வழக்கம் போல் இன்றைக்கும் நான் தாமதமாகத்தான் எழுந்திரித்தேன் As usual, I woke up late today. சரியாக ஆறு மணி இருக்கும் It was 6 in the morning. என் காலை கடன்களை முடித்துவிட்டு அலுவலகம் செல்ல தயாரானேன் I finished my daily routine and got ready to go to the office. தொடர்வண்டி நிலையம் அடைய 15 நிமிடங்கள் ஆனது It takes 15 minutes to reach the railway station. அனைவரும் தொடர்வண்டிக்காக காத்து கொண்டிருந்தார்கள் We were all waiting for the train குசும்பு தொடர்வண்டி, நம்ம சரியான நேரத்திற்கு போனால் வராது. சற்று தாமதமாக போனாலும் வராது!! நம்பி தாமதமாக போலாம் Naughty train, when we go on time it won’t come. When we go by late, then it won’t come too! We can arrive late without any stress. அப்பொழுதுதான் அந்த காட்சியை பார்த்தேன் That's when I saw that scene. வழக்கத்திற்கு மாறாக தண்டவாளத்தில் ரயிலிற்கு பதில் ஓர் மயில் வந்துகொண்டிருந்தது Unusually, the peacock was coming on the track instead of a train. நான் மட்டும் அல்ல அனைவரது கவனுமும் அந்த மயில் மேல் தான் Not only me, everyone’s attention was on that peacock. பச்சை வண்ண சுடிதார் அணிந்து இருந்தாள் பார்பதற்கு மிக அழகாக இருந்தாள் She wore green sudithar. She looked more beautiful. எனக்கு அருகில் இருந்தவர்கள் அவளை வண்ணத்து பூச்சியாகவும், மலராகவும், நிலவாகவும் தெரிவதாக பேசிகொண்டார்கள் Who all were standing around me talked about how "she looks like a butterfly, a flower, the Moon, எனக்கு அந்த வானத்து தேவதை தவறுதலாக இடம் மாறி இங்கு வந்து விட்டாளோ என்று தோன்றியது I felt the sky angel mistakenly changed her route and came here. தொடர்வண்டி வந்ததும் அவளை மறந்துவிட்டேன் When the train arrived, I forgot about her. ஒரு வழியாக அலுவலகம் வந்தடைந்து என் அலுவல்களை பார்த்துகொன்டிறிந்தேன் I finally came to the office and started to do my work. சில ஆணிகளை பிடிங்கியவுடன் என் தோழன் வந்து மதிய உணவு சாப்பிட அழைத்தான் After removing some screws, my friend came over and invited me for lunch. இருவரும் உணவகம் சென்றோம் We both went to the lunch hall. அலுவலக உணவறையில் அந்த மயிலை!! மன்னிக்கணும், அந்த பச்சை சுடிதாரை!! மன்னிக்கணும் அந்த பெண்ணை!! பார்த்தபோது எனக்கு மிகுந்த ஆச்சரியம்!! In the office lunch hall, I saw that peacock!! Sorry, that green sudithar!! Sorry, that girl!! I was so surprised!! உங்களுக்கும் தானே Aren’t you.. மீதியை அடுத்த பதிவில் பார்க்கலாம் The rest, we can see in my next post.

6 comments:

Anonymous said...

Hi Hero,
Great to meet you on your blog. Wish you a great time, have a thundering blast. Looking forward to see many more interesting posts in future.With best wishes.

ADI

NSK said...

Thanks for your comment/wish ADI
I'm not an hero and i also don't want the title like hero

Anonymous said...

கத்திவாக்கம் nsk தொடர் வண்டி நிலையம். ஒருவேளை இது உண்மை கதையாங்க? சும்மா ஒரு ஆர்வக் கோளாறுதான். தெரிஞ்சுகிட்டா கொஞ்சம் எதிர்பார்ப்போட படிக்கலாமேன்னு கேட்டேன்.

NSK said...

உங்கள் கேள்விக்கும் ஆர்வத்திற்கும் நன்றி அனானி
50/50

DHANS said...

super start athe mathiri speeda pona nalla irukkum..

ennavounmai thakai mathiri therithu??????

mayilu sari sappani neengailla thaana?

NSK said...

நன்றி dhans
உங்கள் வருகைக்கும் ஊக்கத்திற்கும்

சப்பாணி இல்ல பரட்ட