Wednesday 4 March 2009

நன்றி வணக்கம்


சில பல காரணங்களால் என் வலைப்பதிவுகளை சமர்பிப்பதில் தாமதம் ஏற்பட்டுவிட்டது (டேய் என்னமோ ஓராயிறம் பதிவு போட்டு லட்ச்சம் வாசகர்கள் இருக்கிற மாதறி நினைப்படா அப்படின்னு நீங்க சிரிக்கறது தெறியுது. இருக்கட்டும்... இருக்கட்டும்... நாளை வரும் சந்ததிகள் இதை உணரவா போகிறது வரலாறு முக்கியம் நண்பர்களே)

என்னடா தலைப்பு நன்றி வணக்கம்னு பாக்கிறீங்களா...!!
இந்த வலை பூ வழியாக என் கருத்துக்களையும்!! 
படிப்பதற்கு காத்து கொண்டிருக்கும் எனது நான்கே நான்கு நண்பர்களுக்காக

இப்ப விசயத்திற்கு வருவோம் எதிரிகளை பொருட்படுத்தாமல், பின் விளைவுகளை பற்றி கவலைபடாமல் சமூக அக்கறையோடு செயல்படுபவர்களை ஊக்கப்படுத்துவது தவறா? என்றால் தவறில்லை...

அதுவல்ல இந்த பதிவின் நோக்கம் ஆனால் அடுத்தவர் படும் துன்பம் கண்டு வேதனையடைந்து தன்னால் முடிந்தது இந்த பிரச்சனையின் தீவிரத்தை உலக மக்கள் கவனத்திற்கு கொண்டு சென்று அதன் முலம் தீர்வு கிட்ட தன் உயிரையே மாய்த்துகொண்ட சகோதரர் முத்துக்குமார் செய்தது சரியா? அதனால் நடந்தது என்ன? நமது கடமை என்ன?
சரியா என்றால்.. .
அதனை சரி என்று சொல்ல ஆயிரம் காரணம் இருப்பினும் உயிரை மாய்த்து கொள்வது தவறு என்பதே அனைவருடைய கருத்து
அதனால் நடந்தது என்ன என்றால்...
பல போராட்டங்கள் நிகழ்ந்தது, கிளர்ச்சி ஏற்பட்டது ஆனால் துன்பப்படுபவர்கள் நிலை மாறியதா...? இல்லவே இல்லை.

இறக்க குணம் கொண்டவர்கள் இரண்டு நாட்கள் கண்ணீர் விட்டனர் இயலாமையை நினைத்து வருத்தப்பட்டனர் அவ்வளவுதான் மாறாக செய்தித்தாள் விற்பனையாளர்கள் நிறைய சம்பாதித்தனர் அரசியல் வாதிகள் தன் சொந்த லாபதிற்க்கு அச்செயலை பயன்படுத்தி கொண்டனர் என்பதுதான் நிதர்சனமான உண்மை.
நமது கடமை என்ன என்றால்...
யாருக்கும் கெடுதல் செய்யாதிர்கள், உங்களால் இயன்ற உதவிகளை முடிந்த மட்டும் செய்யுங்கள். நாம் நேரடியாக செயல்பட முடியாவிட்டாலும், எதிரிகளை பொருட்படுத்தாமல், பின் விளைவுகளை பற்றி கவலைபடாமல் சமூக அக்கறையோடு செயல்படுபவர்களை ஊக்கப்படுத்துங்கள். அவர்கள் பக்கம் நின்று அவர்களது முயற்சிகளுக்கு ஆதரவு கொடுங்கள்.

இதனால் ஒன்னும் நடக்க போறது இல்லைன்னு சொல்றவங்க சொல்லிட்டேதான் இருப்பாங்க அவங்களால ஒரு பயனும் இல்லை. அவர்களது பேச்சை புறம் தள்ளுங்கள்
இன்றைய சிறு துளி நாளைய பெரு வெள்ளம். அந்த முதல் துளி ஏன் நாமாக இருக்க கூடாது ...?


சொல்லுறத சொல்லிப்புட்டேன்
சொல்லுறத சொல்லிப்புட்டேன்
செய்யுறதா செஞ்சிடுங்க
நல்லதுன்னா கேட்டுக்குங்க
கெட்டதின்னா விட்டுடுங்க

(சொல்லுறத)
முன்னாலே வந்தவங்க என்னென்னமோ சொன்னாங்க
மண்டையில ஏறுமுன்னு முயற்சியும் செஞ்சாங்க
முன்னாலே வந்தவங்க என்னென்னமோ சொன்னாங்க
மண்டையில ஏறுமுன்னு முயற்சியும் செஞ்சாங்க
ஒன்னுமே நடக்காம உள்ளம் நொந்து செத்தாங்க
எந்நாளும் ஆகாதுன்னு எனக்கு தெரியுமுங்க
(சொல்லுறத)

முடியிருந்தும் மொட்டைகளாய் மூச்சிருந்தும் கட்டைகளாய்
விழியிருந்தும் பொட்டைகளாய் விழுந்து கிடக்க போறீங்களா
முறையை தெரிஞ்சு நடந்து பழைய நெனப்ப மறந்து
உலகம் போற பாதையிலே உள்ளம் தெளிஞ்சு வாரீங்களா
முறையை தெரிஞ்சு நடந்து பழைய நெனப்ப மறந்து
உலகம் போற பாதையிலே உள்ளம் தெளிஞ்சு வாரீங்களா

(சொல்லுறத)

சித்தர்களும் யோகிகளும் சிந்தனையில் ஞாநிகளும்
புத்தரோடு ஏசுவும் உத்தமர் காந்தியும்
எத்தனையோ உண்மைகளை எழுதி எழுதி வச்சாங்க
எல்லாம்தான் படிச்சீங்க என்ன பண்ணி கிழிச்சீங்க
எத்தனையோ உண்மைகளை எழுதி எழுதி வச்சாங்க
எல்லாம்தான் படிச்சீங்க என்ன பண்ணி கிழிச்சீங்க
-பட்டுகோட்டை கல்யாணசுந்தரம்

1 comment:

Anonymous said...

Nice presentation but you missed to add a lot of information… I expect more on your next topic
-well wisher