Monday 16 April 2012

பெர்கென் (Bergen )

எங்கேயும் மலையும், எப்போதும் மழையும் இருக்கும் நகரம் பெர்கென் (Bergen )
பெர்கென் "மலைகளிடையேயான பசும்புல் நிலம் " என்ற அர்த்தத்தில் கி.பி. 1070 ஆம் ஆண்டு Olav kyrre (s /o Harrald Hardrade ) என்கிற மன்னரால் பெயரிடபட்டதாக அறியபடுகிறது.


2012 கணக்கெடுப்பின் படி 3 65 000 மக்கள் தொகையும், பரப்பளவில் 465 சதுர கிலோமீட்டர் கொண்டது

இது நார்வேயின் இரண்டாவது பெரிய நகரம். ஐரோப்பாவின் பெரிய துறைமுகங்களில் பெர்கென் துறைமுகமும் ஒன்று என்ற சிறப்பு மிக்க நகரம். இதை தாண்டி வராற்று சிறப்பு மிக்க நகரமும் கூட, இரண்டாம் உலக போரின் பொது, பெர்கென் ஜேர்மன் வசம் இருந்தது அப்போது பல புராதான கட்டிடங்கள் அழிக்கப்பட்டதாக அறிய படுகிறது மேலும் மிக குறைந்த நாட்களே வாழ்ந்து சரித்திரத்தில் இடம்பெற்ற ஓர் போர் கப்பலை பற்றி இக்கட்டுரையில் பதியணும்னு ஆசைபடுறேன்.



"Bismarck " இது ஜேர்மன் உருவாகிய மிக பெரிய பலம் வாய்ந்த போர்க்கப்பல் 251 மிட்டர் நீளமும் 36 மிட்டர் அகலமும் கொண்டது. ஹிட்லர் இக்கப்பலை தன்னோட மிகப்பெரிய பலமாக நினைத்தார்.



கடல் பயிற்சி முடிந்த பின்பு, மே மாதம் 19 ஆம் தேதி 1941 ல் தனது போருக்கான பயணத்தை prince of egen னுடன் தொடங்குகிறது Bismarck,
முதலில் Terpitz போர்கப்பளுடன் செல்வதாக திட்ட மிடபட்டிருந்தது ஆனால் திட்டமிட்ட படி Terpitz போர்கப்பல் கட்டி முடிக்க தாமதமானதால் prince of egen னுடன் செல்ல வேண்டியிருந்தது




மே 24 ல் ஆங்கிலேயர்களின் பெரிய பலம் வாய்ந்த போர்க்கப்பல்களான Hood (நீளம் 262.1 மிட்டர்) , Prince of wales (நீளம் 227.1 மிட்டர்) களுடன் மோதலில் இடுபடுகிறது. இம்மோதலில் bismarck சிறிது சேதம் அடைகிறது, ஆங்கிலேய போர்க்கப்பல் Hood கடலில் முழ்கியது மற்றொரு ஆங்கிலேய போர்கப்பல் Prince of wales பெரிய சேதத்துடன் பின் வாங்குகிறது.

அடிவாங்கி ஓடின Prince of wales மேலும் 5 போர்கப்பலுடன் bismark ஐ தேடி வருகிறது.


மே 27 1941 ல் Bismarck ஐ ஆங்கிலேய போர்க்கப்பல்கள் சுற்றி வளைத்தன
, நீண்ட சண்டைக்கு பிறகு Bismarck மடிந்தது.

மிக குறைந்த காலமே வாழ்ந்து சரித்திரத்தில் இடம்பெற்ற இக்கப்பல் 1941 மே 21 ல் Grimstadfjord bergen வந்த பொது எடுத்த படம் கிழே



மொழி : பொதுவா நார்வே முழுவதும் நார்வேஜியன் பேசுவாங்க, ஒவ்வொரு பகுதிக்கும் ஓர் வட்டார சொல் வழக்கு உண்டு
நார்வே ஜெர்மன் மற்றும் டேனிஷ் நாடுகளின் ஆளுமைக்குட்பட்டிருந்ததாலும் பெர்கென் நார்வேயின் வாணிப மைய பகுதியாக இருந்ததாலும் மிக எளிதாக அந்நாடுகளின் மொழிகலப்பு இங்கு நிகழ்ந்துள்ளது அதனால் தான் எழுத்து வடிவத்தில் இருக்கும் ny norsk மற்றும் bok mol ல் இல்லாத சொற்களும் இங்கு சொல் வழக்கில் இன்றளவும் உள்ளது

மக்கள்: பொருளாதாரம் சீராக இருப்பதால் எந்த பிரச்னையும் இல்லாத மக்கள், நேரத்தை மிக சரியாக கடைபிடிப்பவர்கள். சந்திப்புகளுக்கு காலதாமதமாக வந்தார் என்று எவரையும் குறை கூற முடியாது. மிக இயல்பாக இருப்பார்கள்.

பொதுவாக அனைவரும் கல்வி கற்றவர்களாக இருக்கிறார்கள் ஆதலால் இங்கு ஆங்கிலத்தை வைத்து வாழ்கையை ஓட்ட முடியும். ஆனால் ஒரு சிலர் ஆங்கிலம் பேசுவதை விரும்புவதில்லை, அதில் எனக்கும் உடன் பாடு உண்டு, அதற்க்கு மொழி பற்றும் மொழி மேல் உள்ள ஒரு காதலும் காரணமாக இருக்கும் என நம்புகிறேன்.

எனக்கு ஏற்பட்ட ஓர் அனுபவத்தை சொல்லனும்னா, ஓர் பேருந்து பயணத்தின் பொது,எனது மாதந்திர பயணசீட்டில் 200 NOK சேர்க்கும்படி ஓட்டுனரிடம் வினவினேன் (could you top up with 200 NOK on my pass) அவர் சொன்னார் "எனக்கு தெரியாது, (jeg ved ikke) நீ ny norsk அல்லது bok mol ல் பேச வேண்டும் (du må snakke med nynorsk eller bok mol)" ஒரு கணம் திகைத்து போனேன். ஏன் என்றால் இதற்கு முன்பு இரண்டு முறை 200 NOK யும் மாதாந்திர பயணச்சீட்டையும் நீட்டியவுடன், நான் சொல்வதற்கு முன் மற்ற ஒட்டு னர்கள் அவர்களாகவே இத்தேவையை பூர்த்தி செய்திருகிறார்கள். இந்தமுறை எதிர்மறையாக நடந்ததால் திகைப்பாக இருந்தாலும், மன்னித்து கொள்ளும்படி கூறிவிட்டு என் இருக்கை வந்து அமர்ந்தேன். நான் இறங்கும் இடம் வந்ததும் எப்போதும் போல் ஓட்டுனருக்கு நன்றி கூறி இறங்கினேன்.(பொதுவாக இங்கு இருப்பவர்கள் ஓட்டுனருக்கு நன்றி கூறி இறங்குவதை வழக்கமாக வைத்திருகிறார்கள் இந்த பண்பு எனக்கு பிடித்ததனால் நானும் அதை வழக்கமாக்கிகொண்டேன்).

அதே நேரம், நான் பேருந்திற்காக காத்து கொண்டிருந்த சமயம், என்னிடம் தானாகவே வந்து, ஹேய் என் பெயர் இது, நான் இங்க வேலை பாக்குறேன், உன் பேர் என்ன, எங்க வேலை பாக்குறே அப்படின்னு எங்களோட பேச்சு பேருந்து வரும் வரை இருந்தது. செல்லும் போதும் அடுத்த தடவை நாம பார்க்கும் பொது நெறைய பேசுறோம் சரியா என்று பள்ளி தோழன் போல் விடை பெற்று செல்பவர்களும் இருக்கிறார்கள்.

ஒரு சின்ன நடை பயணம் போனாலும் எதிர்படுற அத்தனை பெரும் உங்களுக்கு ஓர் வணக்கம் வச்சிட்டு போவாங்க, ஒரு சிலர் வணக்கத்தோட நின்று விசாரித்து விட்டும் செல்வார்கள் ஆனால் நல்லா பழகனும்னா நோர்வேஜியன் மொழி கண்டிப்பாக தெரிந்துருக்கணும்.

பொழுதுபோக்கு:- மலை ஏறுவது, பனி சறுக்கு விளையாடுவது, மிதிவண்டி பயணம் செல்வதையும் பெரும்பாலறது பொழுது போக்காக சொல்லலாம்.

ஒரு முறை நானும் எனது அலுவலக நண்பர்களுடன் மலை ஏறுவதற்கு சென்றேன் அவர்கள் சொன்னது இம்முறை நாம் செல்வது கடினமாக இருக்காது அதன் உயரமும் 340 மிட்டர் (Fjell liatårenet , Sotra ) -தான் என்றார்கள். ஆனால் எனக்கு அது கடினமாக தான் இருந்தது. காரணம் மழை நீர் வழிந்தோடும் பாதையின் ஊடாக இவர்கள் ஏறுகிறார்கள். எனவே சிறிய பாறைகள் உருள வாய்ப்பிருக்கிறது.


(எப்போதும் மழை பொழியும் இடம் என்பதால்) ஏறும் வழியில் மழை நீர் வடிந்து ஓடி கொண்டிருக்கும், சில இடங்களில் தேங்கி சகதியாக காணப்படும். நல்ல பாதணியுடன் செல்ல வில்லை எனில் விபத்திற்கு வாய்பிருக்கிறது.

(பொதுவா என்னோட பொழுதுபோக்கு என்னன்னா என் பையனோட சண்டை போடுறது ஏன்னா என் பொண்டாட்டிகிட்ட சண்டை போடா முடியாது பாருங்க )

7 comments:

Anonymous said...

நல்லா முயற்சி பண்ணியிருக்கீங்க, bergen super city தான் ok வா

- கணேஷ்

NSK said...

வருகைக்கு நன்றி கணேஷ், எல்லா ஊரும் நல்லா ஊருதான், எல்லா மக்களும் நண்பர்கள் தான். பேர்கன் தான் சிறந்ததுன்னு நான் இங்க சொல்லவே இல்லையே.

என் அனுபவத்தில் (உங்கள விட கம்மிதான் ) சொல்லனும்னா எல்லாமே நல்ல ஊரு தான் ஆனால் எந்த ஊர் போனாலும் ஓர் எச்சரிக்கை உணர்வோடுதான் பழகனும், ஏன்னா இங்க MOLDE லே, (சென்னைலிருந்து 10 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவில் நோர்வே ல் இருக்கிற ஒரு ஊரு) தமிழ் மக்களை பார்த்த எவ்வளவு சந்தோஷ படுவீங்க, அதே எண்ணத்தில் Molde லே ஒரு தமிழ் குடும்பத்துக்கிட்ட ரொம்ப மரியாதையா, அன்பா பழகினேன். ஆனா பாருங்க, அது ஒரு மலத்தை திங்கற குடும்பம்னு தெரிந்தவுடன், நொந்து போயிட்டேன். (ஒன்னு ரெண்டு கருமம் புடிச்சவனுங்களால எல்லாரையும் வெறுப்பதை விட) எந்த இடம் போனாலும் ஓர் எச்சரிக்கையுடன் இருக்கறது ரொம்ப நல்லது.

DHANS said...

சுரேஷ் நல்ல பதிவு, பொதுவா ஐரோப்பாவின் வரலாற்றில் எந்த ஒரு சிறிய விஷயமா இருந்தாலும் ஒவ்வொரு நாடும் அதை பெரிய பொக்கிஷமா பாதுகாத்து வருவாங்க, நீங்க சொன்ன கப்பல் கதையும் அதுபோலதான், ஆனா நம்மூர்ல?

மொழிப்பற்று விசயத்தில் சரிதான், ஆனால் வெளியூரில் இருந்து வந்த ஒருவர் அந்த ஊரின் மொழியை பேச வேண்டும் என கட்டாயப்படுத்துவது சிறிது நெருடல் (சிறிது காலம் மட்டும்தங்கி இருப்பவரை) உங்களுக்கு ஆனால் அது பொருந்தாது.

எதிர்படுவோருக்கு இந்த வணக்கம் சொல்வது என்பதுநல்ல பண்பு ஆனால் அங்கிருந்து நம்ம ஊருக்கு வந்து எதிர்பட்ட ஒரு பெண்ணிடம் சொல்லி இன்னும் அந்த பெண் என்னை மொறைக்குது

நாலு மாடி எருரதுகே இங்க மூச்சு வாங்குது அப்புறம் எங்க மலை ஏறுவது ?

NSK said...

வணக்கம் dhans , நீங்க சொல்றதுல நான் உடன் படுறேன் ஆனால் நான் இங்க சொல்ல வந்தது, நம்ம ஊர்ல ஆங்கிலத்தை ஒரு மொழியா மட்டும் பாக்குறோமா, இல்லை அதையும் ஓர் அறிவு சம்மந்த பட்ட விசயமா பாக்குறோமா என்பதுதான். இரண்டாவது வணக்கம் சொல்றது அது ஏன் ஒரு அழகான பொண்ண பாத்து மட்டும் சொல்றீங்க, பாக்குற எல்லார்கிட்டையும் சொல்லி பழகுங்க கண்டிப்பா அதுக்கு பயன் இருக்கும்.

DHANS said...

nsk, I didnt mention "alagana ponnu" I just mentioned " oru pen"

I didnt say not only to a girl, i did with all and I have been seen as a ailen so Just stopped that habbit.

NSK said...

வணக்கம் dhans, நம்ம செயல் சரியென்றால் நாலு பேரு மதிக்கல என்பதற்காக விட்டுற கூடாது.
ஒரு நல்ல பண்பு வணக்கம் சொல்றதுக்கே தயங்குறிங்க, கொஞ்ச நாளைக்கு முன்னாடி சென்னை மெரினாவுல, free hugs campaign நடந்தது அதை பற்றி கேள்வி பட்டிருந்திங்கன்னா இப்படி சொல்ல மாட்டீங்க. ஆரம்பத்துல கேலி செய்தவர்கள் ஏராளம், அதுக்கப்புறம் அதோட உண்மையான நோக்கத்தை அறிந்த பிறகு பாராட்டாதவர்களே கிடையாது. நல்ல விஷயங்களை உங்கள மாதிரி ஆட்களே செய்யலைனா வேற யாரு வந்து செய்வாங்க

DHANS said...

நான் வணக்கம் சொல்ல தயங்கவில்லை ஒரு செயலை செய்யும்போது எதிர்வினை இல்லையென்றால் ஒரு கட்டத்தில் சலிப்படைந்து விடும் அதுவே.
நமக்கு இந்த ப்ரீ ஹக்ஸ் எல்லாம் நம்பிக்கை இல்ல, இங்க இருக்கவன் பாதிபேரு மனநிலை வேறு மாதிரி இருக்கு, எல்லோரும் ஒரு முகமூடிய போட்டுக்கிட்டு வெளிய சுத்திகிட்டு இருக்காங்க.

உண்மையான நோக்கம் அறிந்தவர்கள் பாராட்டுவார்கள் அனால் அவர்கள் மிக குறைவு