Tuesday 20 March 2012

குமாரு (எ) டோமரு

நண்பர் ஜீவா வீட்டு அழைப்பு மணியை அழுத்தி விட்டு வெளியே காத்து கொண்டிருந்தான் ராகுல்.
வெகு நேரம் சென்ற பிறகு அலைபேசியில் யாருடனோ உரையாடி கொண்டே கதவை திறந்த ஜீவா சைகை முலமே அழைத்து உட்கார வைத்து விட்டு. ஒரு நிமிடம் என்று சொல்லிவிட்டு, அலைபேசியில் தன் உரையை தொடரலானார்.
(உரையாடலை துண்டித்து விட்டு, வேண்டா வெறுப்பாக அழைப்பவர்கள் மத்தியில் ஜீவா பரவாயில்ல )

அலைபேசியில் ஜீவா : பையனை ஒழுங்கா பாத்துக்க கூடாதா ஏங்க இப்படி செய்றீங்க , இப்ப பாருங்க உடம்பு சரி இல்லாமல் அவதிப்படுகிறான். இனிமேலாவது சாலையோர கடைகளில் தின்பண்டங்கள் வாங்க அனுமதிக்காதீங்க. ஏன் என்றால் அங்க இருக்கிற ஈக்கள் ரொம்ப மோசமானவை சாலையோரத்தில் இருக்கிற அசிங்கத்தின் மேலையும் உட்காரும், தின்பண்டங்கள் மேலையும் உட்காரும் அதனாலதான் அந்த தின்பண்டங்களை உண்பதால் பல விதமான நோய்கள் வருது என்று யாருக்கோ அறிவுரை கூறி அலைபேசி உரையாடலை துண்டித்தார்.
ராகுலுக்கு சிரிப்பை அடக்க முடியவில்லை

ஜீவா :- என்ன ராகுல் கிண்டலா சிரிகிறீங்க

ராகுல் :- நீங்க பேசுனதெல்லாம் சரி தான், ஆனால் மூன்று அறிவு படைத்த உயிரினத்தை வில்லன் மாதிரி சொன்னீங்களே அதான் எனக்கு சிரிப்பு வந்திருச்சி

ஜீவா :- ஏன், ஈ தானே காரணம், அவருக்கு புரியணும்னு அப்படி சொன்னேன் இது தப்பா.


ராகுல் :- தப்பே இல்ல, நான் சிரித்ததற்கு காரணம். ஈ க்கு மூன்று அறிவு, அதற்க்கு தெரியாது, அதோட செயலால் மனிதற்கு ஏற்படும் தீங்கு பற்றி. நாமதான் கவனமா இருக்கணும். ஆனால் ஆறறிவு படைத்த மனிதர்களே இந்த மாதிரி காரியத்தை செய்ய தயங்குறது கிடையாது. அப்படி இருக்கும் போது ஈ யை வில்லன் மாதிரி பேசுறது சரியா??

ஜிவா :- அது என்னமோ சரி தான், ஆனால் எல்லாரும் அந்த மாதிரி கிடையாதில்லை.

ராகுல் :- ரொம்ப சரி எல்லாரும் கிடையாது- ஆனால் கொஞ்சம் பேர் இருக்காங்க
(இருக்கானுங்க) உதாரணத்திற்க்கு, இங்க டோமரு இருக்கார்ல

ஜீவா:- யாரு, அந்த உருவத்திற்கும் அவன் அறிவுக்கும் சம்பந்தமே இருக்காதே அவன சொல்றீங்களா

ராகுல் :- அவனே தான். ( ஆளு வளர்ந்த அளவுக்கு, அறிவு வளரலன்னு சொல்லுறது 100 % இவனுக்கு பொருந்தும்.)

ஜிவா :- நல்லா தானே பேசுவான், எல்லா பல்லும் தெரியற மாதிரி சிரிச்சி பேசுவானே அவன் என்ன பண்ணான்

ராகுல் :- "யாதும் ஊரே யாவரும் கேளிர்" அப்படின்னு என்னோட சின்ன வயசுல ஆரம்ப பள்ளியில சொல்லி கொடுத்ததன் விளைவோ என்னவோ, எல்லார்கிட்டயும் (ஜாதி, மதம், நாடு வேறுபாடின்றி) நண்பனா இருக்கணும்னு ஆசைபடுவேன். அப்படித்தானே இங்க ஒரு குடும்பத்துக்கிட்ட ரொம்ப மரியாதையா, அன்பா பழகினேன். ஆனா பாருங்க, அது ஒரு மலத்தை திங்கற குடும்பம்னு தெரிந்தவுடன். அதுங்க கூட, பன்றிங்க(pig) தான் சேரும் நமக்கெதுக்குன்னு. அவர்களுடனான சந்திப்பை நிறுத்தி, அதுங்க கலந்துக்கற நிகழ்சிகளில் கூட நான் கலந்துக்காம ஒதுங்கி இருக்கேன்.

இந்த டோமரு ஒரு நாள் வீட்டுக்கு வந்து, நீங்க ஏன் எங்கட நிகழ்சிகளில் கலந்துகிறதில்லை ன்னு கேட்டான். என்னடா அக்கறையா கேக்குறானேன்னு. அந்த மானங்கெட்ட குடும்பத்தை பத்தி எனக்கு சொல்ல விருப்பம் இல்லாதனால, இல்லங்க நான் வேற பக்கம் வேலை தேடிட்டு இருக்கேன். அதனால தான் என்னால எந்த நிகழ்சிகளிலும் கலந்துக்க முடியலன்னு சொல்லி, உபசரிச்சி அனுப்பி வச்சேன் (நம்மளையும் வீடு தேடி வந்து விசாரிச்சதனாலதான் ).

ஜீவா :- ஏங்க அக்கறையா விசாரிச்சது தப்பா

ராகுல் :- முழுசா கேக்காம முடிவுக்கு வர கூடாது. அந்த டோமரு அதுக்கப்புறம் என் நண்பர்களை சந்தித்து கேட்டுருக்காரு (கேட்டுருக்கான்) " ராகுல் வேற வேலை தேடுறது உங்களுக்கு தெரியமா??, ஏன் அவரு வேற வேலை தேடுறாரு?? " (ஏன்னா இவன் அந்த கேவலமான குடும்பம் எடுக்கற வாந்திய திங்கறவன் அதான் நான் அவங்களை பத்தி என் நண்பர்களிடத்தில் சொல்லியிருப்பேன்னு விசாரிக்கறான்.)

ஜீவா :- அடுத்தவர்கள் சொல்ல வேண்டாம்னு நினைக்கறதை, தெரிஞ்சிக்கணும்னு நினைக்கறது அவங்க கோமணத்தை உருவி பார்கறதுக்கு சமம்ன்னு, கூடவா இந்த டோமருக்கு தெரியாது.

ராகுல் :- அவன் மனசுக்குள்ள பெரிய அறிவாளி , நாங்க எல்லாம் முட்டாள்னு நினைச்சிட்டு, அந்த மலத்தை திங்கற குடும்பத்தை பற்றிய தகவல் வெளிய பரவியிருக்கான்னு பாக்குறதுக்காக இந்த மாதிரி பண்ணியிருக்கான்.
என் நண்பர்கள்கிட்ட என்ன பத்தி விசாரிச்சா எனக்கு தெரிய வராதா.

ஆனா பாருங்க அதுக்கப்புறமும் அந்த டோமரு என்னை சந்திக்கற சமயத்தில் பல்லகாட்டிட்டு கையை ஆட்டிட்டு போறான், எப்படி அவனால முடியுதின்னு எனக்கு புரியல


ஜீவா :- இப்ப புரியுது “ஈ” யாவது அதற்க்கு தெரியாமல் செய்கிறது. இந்த டோமருக்கென்ன குறைச்சல் இவ்வளவு கேவலமானவனா இருக்கான்.



:- நல்ல பண்புள்ளவர்களை அறிந்து பழகனும் அப்பத்தான் வாழ்க்கையை அடுத்த இலக்குக்கு கொண்டு செல்லக்கூடிய விசயங்களை சிந்திப்போம். இந்த “டோமரு” மாதிரி ஆட்களோட பழகினா, கேடு விளையறது மட்டுமில்லாமல் உங்க அறிவும் " இப்ப சொப்ன சுந்தரிய யாரு வச்சிருக்கா" அப்படிங்கற
(ரொம்ப புத்திசாலித்தனமான) தேடல்லதான் இருக்கும்.

2 comments:

DHANS said...

நீண்ட நாளைக்கப்புறம் ஒரு பதிவு, எதனாலேயோ அதிகம் பாதிக்கப்பட்டு இருக்கீங்களா? பயங்கர காரமா இருக்கு பதிவு,
நன்றாக உள்ளது ஆனால் டோமரு மாதிரி பலபேர் இருக்காங்க, சொப்பன சுந்தரிய யார் வச்சுருக்கா? எனும் கேள்வி நம்ம சுத்தி உள்ள சமூகத்துல பலபேர்க்கு இருக்கு

இதே நிலைமை எனக்கு ஏற்பட்டு இருக்கு அது உங்களுக்கும் தெரியும். விடுங்க பாஸ் எல்லாம் சரியாய் போய்டும்

NSK said...

வணக்கம் dhans , எந்த ஒரு விசயமும் நம்மை பாதிக்காத வரை நமக்கு பெருசா தெரியறது இல்ல. அதுக்காக எல்லாரும் பட்டு தான் தெரிஞ்சுக்கணும்னு இல்ல. எழுத்துல காட்டமா எழுதனாலே அதனோட வீரியம் புரியும்னு நம்புறேன் அதனாலதான் கொஞ்சம் காரமா எழுதிட்டேன். உங்கள் கருத்துக்கு நன்றி dhans