Monday 4 March 2013

குற்றமும் அதன் பின்னணியும் - துப்பறியும் சிறுகதை




மணி இரவு 8.00
சேகர் பெரும் கலக்கத்தோடு காணப்பட்டார்.தன் வீட்டிலிருந்து வெறும் 2 கி.மீ தொலைவில் உள்ள வணிக வளாகத்திற்கு சென்ற மருமகளை, காலையிலிருந்து காணவில்லை. எங்கு தேடியும் கிடைக்காத காரணத்தால் காவல்துறையின் உதவியை நாடினார்.
 
காவல்நிலையத்தில் ஆய்வாளர் (Inspector) விவேக் விவரங்களை மிக துல்லியமாக குறித்து கொண்டார்.
 
- சேகரின் மகனுக்கு கல்யாணம் முடிந்து ஒரு வாரமே ஆனா நிலையில், மகன் வெளியூர் சென்றுள்ளார் மருமகளை காணவில்லை.
 
-மருமகள் எடுத்துசென்ற கைப்பேசி'யின் இணைப்பு துண்டிப்பு ("switch off") செய்யப்பட்டுள்ளது.புதுவிடம் என்றபோதிலும் யாரும் அவருடன் துணைக்கு செல்லவில்லை.
 
-சேகரின் அக்கம்பக்கத்தில் வசிப்பவர்கள் பற்றிய விபரம், எதிர் வீட்டில் நாதன் குடும்பம் அவரது மகன் ரிசி, மகள் நிசா
பக்கத்துக்கு வீட்டில் இராமன் குடும்பம் அவரது தம்பி சுகி
அதற்கடுத்த வீடுகளில் மோகன் குடும்பம் அவரது மகள் திலகா மற்றும் ரமேஷ் குடும்பமும் இருக்கிறது
ஆனால் அதில் யார் மீதும் சேகருக்கு சந்தேகம் இல்லை.
 
குறிப்புகளை பெற்ற விவேக், தெரிந்தவர்கள் யாருடனாவது சென்றிருக்க வாய்ப்புள்ளது எதுக்கும் ஒரு நாள் அவகாசம் கொடுங்க உங்க மருமகளை கண்டுபுடிச்சிரலாம் என்று நம்பிக்கையுட்டி அனுப்பினார்.
 
அடுத்த நாள் காலை,
 
எந்த தகவலும் கிடைக்காதலால் காவல் நிலையத்தை தொலைபேசியில் தொடர்பு கொண்டார் சேகர். மறுமுனையில் பதிலளித்த விவேக், தாங்கள் முயற்சித்து கொண்டிருப்பதாகவும் இது விசயமாக மேலும் சிலரை விசாரிக்க இன்னும் 30 நிமிடத்தில் அங்கு வருவாதாக கூறி இணைப்பை துண்டித்தார்.
 
 
உதவி ஆய்வாளர் நெப்போலியன் இதுவரை தாங்கள் சேகரித்த விபரங்களை விவேக்' யிடம் பட்டியளிட்டார் .
-அலைகற்றை சேவை நிறுவனத்திடமிருந்து பெற்ற தகவலின் படி, சேகரின் மருமகள் கைபேசி எண் சரியாக 10 மணிக்கு வணிக வளாகத்திற்கு அருகில் இணைப்பு துண்டிப்பு("switch -off " ) செய்யப்பட்டுள்ளது .
 
-வணிக வளாகத்தில் எந்தவிதமான அசம்பாவிதமும் அன்றைய தினம் நடைபெறவில்லை
 
-சேகரின் அக்கம் பக்கத்தில் இருப்பவர்களில், நாதன் ஏற்கனவே பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டு சிறை சென்றவர் என்ற விபரம் உள்ளது.
 
இந்த விபரங்களுடன் சேகரின் வீட்டை அடைந்தனர்.
 
அங்கு சேகரிடம் நாதன் பற்றி விபரங்களை ஆராய தொடங்கினர்.
 
சேகரும், நாதன் குடும்பம் சில சட்ட விரோதமான செயல்களை செய்து வந்தது உண்மைதான் ஆனால், தாங்கள் இருவரும் ஒரே ஊர் என்பதாலும், இதுவரை தங்களுக்கு எந்த வித கெடுதலும் செய்யாததாலும் தான் இதுவரை அந்த குடும்பத்தோடு நட்பு வைத்திருப்பதாக கூறினார் ( போங்கையா .. நீங்களும் உங்க வெங்காய நட்பும் என்றுதான் விவேக்கிற்கு பட்டது)
 
விவேக் :- உங்க மருமகளுக்கு இது புதுவிடம் தானே அப்புறம் ஏன் அவங்களை தனியா செல்ல அனுமதித்தீர்கள்
சேகர்:- காலை மணி 8.30 க்கு புறப்பட்டதாலும், கையில் அலைபேசி வைத்திருந்ததாலும், அது தவிர பக்கத்தில் உள்ள வணிக மாளிகை தானே என்பதனால் அனுமதித்தேன்.
விவேக் :- உங்க பையன் இப்போ எந்த ஊர்ல இருக்கிறார். ஏன் இன்னும் வரலை, அவருக்கும் உங்க மருமகளுக்கும் ஏதாவது பிரச்சனை இருந்ததா.
சேகர்:- ஐயோ, அப்படியெல்லாம் ஏதும் இல்லை, மனைவி வந்த நேரம் பதவி உயர்வுக்கான பயிற்சி வகுப்புக்கு போறேன் என்று சந்தோசமாகத்தான் போனான். இரவு வாகனம் கிடைக்காதலால் இன்று காலை புறப்பட்டு வந்து கொண்டு இருப்பதாக சொன்னான்.
விவேக் :- மணமாகி ஒரு வாரம் தான் ஆகிறது. உங்க மகன் வெளியூர் போறாரு, அதே நாள் உங்க மருமகளை காணவில்லை. எதுக்கும் உங்க மகன் வந்ததும் என்னை வந்து பார்க்க சொல்லுங்க
சேகர்:- மருமகளை காணாம தவிச்சிட்டுருக்க, எங்க மீதே பழி போடுவது அநியாயம்.
விவேக் :- தவறு உங்க மேல இல்லனா நீங்க பயப்பட வேண்டிய அவசியமே இல்லை, எல்லா கோணத்திலையும் விசாரிக்க வேண்டியது எங்க கடமை.
சேகரை தொடர்ந்து நாதன் வரவழைக்கபட்டார்.
நாதன் விவேக்கை கண்டதும் ஒரு பெரிய கும்பிடு போட்டார்.
விவேக்:- அந்த பொண்ணு இந்த இடத்திற்கு புதுசு, உங்களுக்கும் ராமன் குடும்பத்திற்கும் மட்டும் தான் அறிமுகபடுத்தி வைக்கபட்டிருக்கா, எல்லாத்தையும் கூட்டி கழிச்சி பார்த்தா, என் சந்தேகம் உங்க மேலதான் ரொம்ப பலமா இருக்கு.
நாதன்:-ஐயா, என்ன சொல்றிங்க, இப்ப நான் எந்த குற்றச்செயல்களிலும் ஈடுபடுறதில்லை, என்ன நம்புங்கய்யா
விவேக்:- அப்புடின்னா யாரு இதை செய்தார்கள்..?
நாதன்:- அந்த ரமேஷ் 'ஐ விசாரியுங்கள், ஏன்னா நேற்று அவன்தான் அந்த பொண்ணு பின்னாடியே போனான்.
விவேக்:- ஆக அந்த பொண்ணு போனதா நீ பார்த்திருக்க, சரி நீ போ, நீதான் எல்லாத்துக்கும் காரணம்னு தெரிந்தது அப்புறம் வச்சிக்குறேன் உனக்கு.
அதன் பிறகு விவேக், நெப்போலியனை அழைத்து நாதன் மீது ஒரு கண் இருக்கட்டும் அவன் நிறைய தடுமருறான். அப்புறம் அந்த ரமேஷை கூப்பிடுங்கள் என்றார்.
ரமேஷ் ஒரு பண்ணாட்டு நிறுவனத்தில் பணிபுரிபவர். அவர் வரவழைக்கப்பட்டார் ,
விவேக்:- நீங்க நேற்று காலை 8.30 மணிக்கு என்ன செய்தீர்கள் என்று சொல்ல முடியுமா
ரமேஷ் :- நேற்று எனது நண்பருடன் அவரது மகிழ்வுந்தில் (car ) வணிக வளாகம் வரை சென்றுறிந்தேன்.
விவேக்:-இல்லையே , நேற்று நீங்கள் அந்த காணமல் போன பெண்ணை தொடர்ந்து நடந்து சென்றதாக அல்லவா நான் கேள்விபட்டேன்.
ரமேஷ் :- நான் பேருந்து நிறுத்தம் வரை நடந்து சென்றது உண்மைதான் ஏன்னா அங்குதான் எனது நண்பர் காத்துகொண்டிருந்தார். முதல்ல ஒரு விஷயம் தெரிஞ்சுக்கோங்க, அந்த பொண்ணு காணாமல் போனதற்கு பின்புதான் அப்படி ஒரு நபர் இந்த வீட்டில் இருப்பதே எனக்கு தெரியும். அவர் தான் எனக்கு முன்னாடி நடந்து சென்ற பெண்மணி என்பதுபற்றி எனக்கு தெரியாது.
விவேக்:- சரி வணிக வளாகத்தில் யாரையெல்லாம் நீங்க பார்த்திங்கன்னு ஞாபகபடுத்தி சொல்லமுடியுமா.
ரமேஷ் :- யாரையும் பார்த்ததாக எனக்கு ஞாபகம் இல்லை, ஆனால் நான் கிளம்பும்போது மகிழ்வுந்து நிறுத்தும் (parking place ) இடத்தில சுகி 'யை பார்த்ததாக ஞாபகம்.
விவேக்கின் பார்வை சுகியின் மீது திரும்பியது
சுகி தற்சமயம் வேலைக்கு செல்லாமல் தனது அண்ணன் ராமனுடன் வசித்து வருபவர், சுகி வரவழைக்கப்பட்டார்.
விவேக்:- சுகி எதையும் மறைக்காம சொல்லுங்க நேற்று காலை 8.30 க்கு என்ன செய்தீர்கள் , நேற்று வணிக வளாக மகிழ்வுந்து நிறுத்தும் இடத்தில உங்களை பார்த்ததற்கு எங்களிடம் ஆதாரம் உள்ளது.
சுகி :- இதுல சொல்றதுக்கு ஒன்னும் இல்லைங்க, நேற்று உடற்பயிற்சி நிலையத்திற்கு நடந்து போயிட்டுருந்தேன், அதை பார்த்த மோகன் மாமா அவரோட மகிழ்வுந்தில் கூட்டிட்டு வந்து வணிக வளாகத்தில் இறக்கி விட்டார். ஏன்னா அது வணிக வளாகத்திற்கு பக்கத்து கட்டிடம் தான்.
அடுத்து மோகன் அழைக்கபட்டார் அவருடன் அவரது மகள் திலகாவும் வந்திருந்தார். மோகன் ஒரு நடுத்தர குடும்பத்தை சேர்த்தவர் எல்லாரிடமும் பழகும் நபர் அதே சமயத்தில் எந்த பிரச்சனையிலும் தலையிட மாட்டார், நமக்கெதுக்கு வம்புன்னு பாக்கிற ராகம்.
விவேக்:-நேற்று எதற்க்காக வணிக வளாகத்திற்கு சென்றீர்கள், அங்கு யாரையெல்லாம் சந்தித்தீர்கள் என்று சொல்ல முடியுமா
மோகன் :- புது ஆடை வாங்குவதற்காக எனது மகுளுடன் சென்றேன், யாரையும் பார்த்ததாக எனக்கு ஞாபகம் இல்லை.
நடுவே இடைமறித்த திலகா, நான் சேகர் மாமா வின் மருமகளையும், நிஷாவையும் அங்கு பார்த்தேன் என்றார்.
நாதன் மகள் நிஷா அழைக்கபட்டார், நிஷாவும் தான் அங்கு சேகரின் மருமகளை பாத்ததாகவும் ஆனால் சிறிது நேரத்தில் அங்கிருந்து கிளம்பிவிட்டேன் ஏனென்றால் 10.30 க்கு எனக்கு மருத்துவமனையில் ஒரு அலுவல் இருந்தது என்றார்.
விவேக்கிற்கு ஒன்றும் பிடிபடவில்லை, சேகரின் மகன் வந்தால் எதாவது துப்பு கிடைக்கும் என்று அங்கிருந்து கிளம்பிவிட்டார்.
மூன்றாம் நாள்
காவல் நிலையத்தில் விவேக்கும், நெப்போலியனும் விவாதித்து கொண்டிருந்தார்கள்.
நெப்போலியன் :- அன்றைய தினம், சுகியும் நிசாவும் சந்திச்சு பேசியதை பார்த்த ஆதாரம் நம்மக்கிட்ட இருக்கு ஆனால் அவர்கள் இருவரும் அதை பற்றி சொல்லவே இல்லை,
விவேக் :- அவர்கள் காதலர்களாக இருக்கலாம்
நெப்போலியன் :- ஆமா, காதலர்கள் தான். இன்னொரு விஷயம் என்னன்னா, அவர்கள் காதலிப்பது நிசாவின் தந்தை நாதனுக்கும் தெரியும் அதனால அவங்க மறைக்க வேண்டிய அவசியம் இல்லையே..?.
அந்த நேரத்தில் வணிக வளாகத்திற்கு அருகில் உள்ள பூங்காவில் ஒரு பெண்ணின் சடலம் இருப்பதாக தொலைபேசி மூலம் செய்தி வந்தது
விவேக்கும், நெப்போலியனும் சம்பவ இடத்திற்கு செல்ல தயாரான பொது சேகரின் மகன் வந்து சேர்ந்தான். அவனையும் அழைத்துக்கொண்டு விரைந்து சென்றார்கள்.
 
சம்பவ இடத்தில,
சடலத்தை கண்டவுடன், அவள் தனது மனைவிதான் என்பதை சேகரின் மகன் உறுதிபடுத்தினார். உடனே தடயவியல் நிபுணர்கள் (forensic experts )  வரவழைக்கப்பட்டார்கள் அதனை தொடர்ந்து பிரேத பரிசோதனைக்கு சடலம் எடுத்து செல்லப்பட்டது.
அவரது இறப்பு கழுத்தை நெறித்து கொல்லப்பட்டு முகம் பெரிய கல்லால் சேதப்பட்டிருந்தது. நகைகள் அனைத்தும் பறிக்கபட்டிருந்தது
 
நான்காம் நாள்
பிரேத பரிசோதனை அறிக்கையும், சேகரின் மருமகள் சுமார் 10.45 மணிக்கு கழுத்தை நெறித்து கொல்லப்பட்டிருக்கிறார் என்று இருந்தது. தலையின் பின்பக்கமும் காயப்பட்டிருந்தது.
சடலத்தின் மீது கைப்பற்றப்பட்ட கைரேகை சுகி, நிஷா, நாதன் மற்றும் ரமேஷ் கைரேகையோடு ஒத்துபோகவில்லை
சம்பவ இடத்தில ஆண்கள் அணியும் கழுத்து சங்கிலி அறுந்து கிடந்தது
அந்த சங்கிலியை எடுத்துகொண்டு சேகரின் வீட்டிற்கு விவேக்கும், நெப்போலியனும் சென்றார்கள்.
சேகரின் வீட்டில்
 
சேகர் ஆற்ற முடியாத துயரத்தில் இருந்தார் காரணம் கடந்த 12 மணி நேரத்திற்குள் தனது மருமகளுக்கு கல்யாணத்திற்கு முன்பே யாருடனோ தொடர்பு இருந்ததாகவும், தற்போது அவரை இரகசியமாக சந்திக்க சென்றபோது இவ்வாறு நடந்து விட்டதாக ஊர் முழுவதும் யாரோ கதை கட்டி விட்டார்கள்.(இதில் முக்கிய பங்கு நாதனின் மனைவிக்கு இருந்தது)
விவேக்கை கண்டதும் சேகர் வீட்டல் குழுமியிருந்தவர்கள் பேச்சை நிறுத்தி அமைதியானார்கள், விவேக் அந்த சங்கிலியை உயர்த்தி இது யாருடையது என்பது பற்றி  யாருக்காவது தெரியுமா என்று கேட்டார்.
அடுத்த நொடி அனைத்தும் அம்பலமானது!!

அந்த அறுந்த சங்கிலி ரிசியோடது, அது அங்கிருந்த அனைவருக்கும் தெரியும்.
ரிசியை விசாரித்ததில் குற்றத்தை ஒப்புக்கொண்டதுடன் இதற்க்கு சேகரின் குடும்பத்தின் மீதிருந்த பொறாமையின் காரணமாக தனது தந்தைதான் திட்டம் தீட்டினார் என்பதையும் தெரிவித்தான்.

சம்பவத்தன்று,
வணிக வளாகத்தில் சேகரின் மருமகளை திட்டமிட்டபடி சந்தித்த நிசா, அருகில் இருக்கும் பூங்கா மிகவும் அருமையாக இருக்கும் வா போகலாம் என்று அழைத்து, வாளகதிற்கு சற்று வெளியே காத்து கொண்டிருந்த ரிசியின் மகிழ்வுந்தில் ஏற்றினாள்

அதன் பின் பூங்காவில் நிசாவும் சேகரின் மருமகளும் , நடந்து கொண்டிருக்கும் போது, ஆள் நடமாட்டம் இல்லாதவிடத்தில், ரிசி பின்னாலிருந்து சேகரின் மருமகள் தலையில் கட்டையால் தாக்கி நிலைகுலைய செய்து நகைகளை பறித்து கொண்டு கொலை செய்து கல்லால் முகத்தை சேத படுத்திவிட்டு அங்கிருந்து சென்று விட்டார்கள்

நோக்கம்:-
குற்றவாளிகிட்டயும் அன்பை காட்டுவது தவறில்லை ஆனால் எனக்கு எந்த கெடுதலும் செய்ததில்லை (ஊரு நாசமா போனா எனக்கென்ன ) அதனால நட்பு பாராட்டுறேன்னு சொல்லும் போது, சேகரின் சுயநலம் அப்பட்டமாக தெரிகிறது .

எந்த ஒழுக்கமும் இல்லாததனால தன்னோட குழந்தைகளை நல்லபடியா வளர்க்க முடியாததை நினைத்து வருத்தபடாம, பக்கத்து வீட்டுக்காரன் சந்தோசமா இருக்குறானே என்ற பொறாமையோடு அவர்களது வாழ்கையை சீரழிக்க நினைக்கும் நாதன் மனித வடிவில் இருக்கும் மிருகம்.


 
 

4 comments:

vimal said...

ரிஷி தான் கொலை செய்தவனாக இருக்க கூடும் ... நிஷா தன் காதலனுடன் இருப்பதை கண்ட சேகரின் மருமகளால் ஊராருக்கு தெரிந்து விடுமோ என்கிற பயத்தில் நிஷா தன் அண்ணனிடம்(ரிஷி ) சொல்ல ரிஷி கொலை செய்திருக்க கூடும் அது மட்டுமின்றி நாதனின் மாணவி சேகரின் மருமகளை மற்றொரு ஆணுடன் தொடர்பில் இருந்ததாகவும் கதை கட்டி இருப்பது தன் மகனை கொலை குற்ற பழியிலிருந்து காப்பாற்றசெய்த திட்டம்

NSK said...

பாராட்டுக்கள் திரு.விமல் உங்கள் கணிப்பு சரியே ஆனால் காரணம் தான் தவறு "அவர்கள் காதலிப்பது நிசாவின் தந்தை நாதனுக்கும் தெரியும்" அதனால அவங்க ஊருக்கு மறைக்க வேண்டிய அவசியம் இல்லையே

http://bharathidasanfrance.blogspot.com/ said...


வணக்கம்!

நகைச்சுவை வேந்தனின் நற்பெயரில் ஓங்கும்
தகைச்சுவை ஈவாய் தழைத்து!

கவிஞா் கி. பாரதிதாசன்
தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

NSK said...

நன்றி கவிஞர் பாரதிதாசன் அவர்களே உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்