Friday, 23 August 2013

எறும்பும் யானையும் பகுதி - 3 (நகைச்சுவை)


நான் கேட்ட யானை எறும்பு பற்றிய நகைச்சுவையை ஒரு தொகுப்பாக கதை வடிவில் உங்களுடன் பகிர்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

அப்பு(யானை), குப்பி(எறும்பு) அறிமுகத்திற்கு  பகுதி -1 மற்றும் பகுதி -2 படிக்கவும்.

அப்பு, குப்பி-யின் காதல் இரு வீட்டாரையும் கண் கலங்க செய்தது, காரணம் பெரிய குடும்பம்-சின்ன குடும்பம் என்கின்ற நடைமுறை சிக்கல். (சாதி காரணம் இல்லங்க - மனிதர்கள் போல் சில்லரைத்தனமாக அவர்களுக்கு சிந்திக்க தெரியாது)

குப்பி(எறும்பு), தான் அப்புவை தவிர வேறொருவரை மணப்பதில்லை என்று திடமாக சொல்லிவிட்டது.





"நான் அவனோடு இருக்கும் போது மிகவும் பாதுகாப்பாக உணர்கிறேன்" (நான் ஊரில் எந்த பிரச்சனை செய்தாலும், அவனே முன்னாடி வந்து எனக்காக ஊர்க்காரர்களிடம் உதை வாங்குறான்!)

"நான் என்ன சொன்னாலும் தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை போல் சிரிச்சிகிட்டே தலையாட்டுவான்" (பாவம் வேற வழி!)

"எல்லாத்துக்கும் மேல என்னை அவனோட தும்பிக்கையில் வைத்து தாங்குவான்"





ஆனால் அப்பு-வின் வீட்டிலோ, அப்பு மன்றாடியும் ஒன்றும் எடுபடவில்லை. அம்மாவின் கண்ணிர் அப்புவை மேற்கொண்டு பேசவிடாமல் செய்தது. எனவே சோகமான முகத்துடன் குப்பியை சந்திக்க அருவிக்கரையோரம் சென்றது.






நடந்தவற்றை கேட்ட குப்பி, நீ கவலைபடாதே நான் பார்த்துக்கொள்கிறேன் என்றது. அதன்படி அன்று மாலையே அப்புவின் பெற்றோரை சந்தித்து அனுமதியும் வாங்கியது.





அப்பு-வால் இதை நம்பவே முடியவில்லை, தான் தலைகீழ் நின்றும் சாதிக்கமுடியாததை இவளால் மட்டும் எப்படி முடிந்தது?? அதுமட்டுமில்லாமல் அதன்பின் அப்புவின் பெற்றோர் இயல்பாகவே இல்லை பேரதிர்ச்சிக்கு உள்ளானவர்கள் போல் காட்சியளித்தனர்.

அப்பு(யானை) தன் மூளையைப் போட்டு குடைந்து கொண்டிருந்த கேள்வியை குப்பியிடமே கேட்டது. "என்னதான் சொல்லி அனுமதி பெற்றாய்..?"

அதுக்கு நம்ம குப்பி(எறும்பு) சொல்லிச்சி





"உங்க மகனோட வாரிசை என் வயித்துல சுமக்கிறேன்னு சொன்னேன்!!"


(தொடரும்)

13 comments:

சசிகலா said...

அப்படியே நானும் ஷாக் ஆகிட்டேன். ஹஹ...
நல்லாவே எழுதுறிங்க ஏன் நிறைய இல்லையென்றாலும் வாரம் ஒன்றாவது எழுதலாமே.. நல்ல நகைச்சுவை உணர்வு இருக்கு உங்களிடம் இன்னும் என்ன என்ன திறமைகள் இருக்கோ. வெளிய கொண்டு வாங்க.

NSK said...

மிக்க நன்றி சசி கலா அவர்களே, உங்கள் வருகைக்கும், ஊக்கம் தரும் கருத்துக்கும்

கரந்தை ஜெயக்குமார் said...

முதன் முறையாக தங்களின் தளத்திற்கு வருகை தந்தேன். அருமை. இனி தொடர்வேன்

கரந்தை ஜெயக்குமார் said...

முதன் முறையாக தங்களின் தளத்திற்கு வருகை தந்தேன். அருமை. இனி தொடர்வேன்

NSK said...

மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் அவர்களே

Anonymous said...

வணக்கம்
இன்று வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துக்கள்
http://blogintamil.blogspot.com/2013/10/blog-post_13.html?showComment=1381633437604#c8779471525760071963

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

அ.பாண்டியன் said...

இன்றைய வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துக்கள் சகோ! முதல் வருகையில் மயக்க வைத்து விட்டீர்கள். அழகான பதிவு. பகுதி 1,2ம் படிக்கனும். விஜயதசமி வாழ்த்துக்கள் சகோ.

டிபிஆர்.ஜோசப் said...

நகைச்சுவை எழுதுவது அவ்வளவு எளிதல்ல. அது உங்களுக்கு இயல்பாகவே வருகிறது. தொடர்ந்து எழுதுங்கள்.

தேன்மதுரத்தமிழ் கிரேஸ் said...

தல சுத்துதுங்க.. :)
வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துகள்!

NSK said...

மிக்க நான்றி சசிகலா அவர்களே,
வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியதற்க்கும் மேலும் பல புதியவர்களை அறிமுகப்படுத்துவதற்க்கும்.

உங்களது இந்த முயற்சி என்னை போன்றோர்களுக்கு மிகுந்த உற்ச்சாகத்தையும் ஊக்கத்தையும் கொடுக்கிறது.

NSK said...

வாழ்த்திய அன்பு உள்ளங்கள் திரு ரூபன், அ.பாண்டியன், டி.பி.ஆர் ஜோசப் மற்றும் கிரேஸ் அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்

கரந்தை ஜெயக்குமார் said...

இதயம் கனிந்த தீபத் திருநாள் நல்வாழ்த்துக்கள்

Unknown said...

நன்றி,எமது web side news இல் பிரதி இட்டுள்ளேன்.ஒரு தடவை எமது web side news வாருங்கள் http://www.v4tamil.com/