இயற்கை வனப்பு கொட்டி கிடக்கும் அழகோவியம் - நார்வே
பிரம்மனின் மிதமிஞ்சிய படைப்பாக நார்வே ‘யையும் சொல்லலாம். கற்பனையில் மட்டுமே சாத்தியப்படும் என்று எண்ணும் சில இயற்கை வனப்புக்கள் இங்கே சாத்தியப்படும்.
இதன் வண்ணங்களை கோ படத்தில் இயக்குனர் கே.வி ஆனந்த் அவர்கள் என்னமோ ஏதோ என்ற பாடலில் பதிவு செய்தார், அதன் பின் மாற்றான் என்ற படத்திற்காகவும் ஒரு பாடலை இங்கு படமாக்கினார்.
Trolltunga ( பூதத்தின் நாக்கு என்று பொருள் )
முதலில் Troll பற்றி நார்வே மக்களின் எண்ணங்களை கேட்டோமானால் ஏகப்பட்ட கதைகள் உலாவுகின்றன
அவற்றில் ஒன்று.
Troll ஒரு பூதமாக சித்தரிக்கபடுகிறது. மனிதர்களுடன் மிக அரிதாகவே நட்புடன் இருப்பார்கள் என்றும் ஆள் நடமாட்டமில்லாத மலைகளில் அல்லது குகைகளில் வாழ்வார்கள் என்றும் அடையாளப்படுத்தபடுகிறது.
பொதுவாக மனிதர்களுக்கு எதிரானவர்களாகவும், சூரிய ஒளி பட்டால் பாறையாக மாறிவிடுவார்கள் என்றும் நம்பப்படுகிறது.
இனி -
மலையின் அடிவாரத்தில் இருந்து அப்பாறை இருக்கும் இடம் செல்வதற்க்கு
குறைந்தது 5 மணி நேரமாகும் மொத்த தூரம் 11.2 கி.மீ. (போய் வர 22.4 கி.மீ.)
பாதை கரடுமுரடாகவும், செங்குத்தாகவும் இருப்பதால் ஏறுவதற்க்கு சற்று சிரமமாக இருக்கும்.
பெர்கெனில் இருந்து 6 மணிக்கு எங்களது பயணத்தை தொடங்கினோம். மொத்தம் 8 பேரு, அதுல ஒருவர் மட்டும் Oslo வில் இருந்து பேருந்து மூலம் தங்கும் விடுதிக்கு வந்து சேர்வார். மீதம் இரு குழுக்களாக இரண்டு மகிழ்வுந்தில் புறப்பட்டோம்.
Odda-வில் உள்ள தங்கும் விடுதியை நாங்கள் அடைந்த போது இரவு மணி 9 ஆகிவிட்டது.
அந்த நேரத்திலும் பயணக்களைப்பு ஏதும் இல்லாமல் கொண்டு வந்த பிரியாணியை சற்று வேக வைத்து பரிமாறினார் பல் மருத்துவர் புகழேந்தி.
நான்கு பேர் என்றாலே கலகலப்புக்கு பஞ்சம் இருக்காது எட்டு பேர் கொண்ட கூட்டணி ஆரவாரம் மிகுதியாக இருந்தது.
அடுத்த நாள் சரியாக காலை 8 மணிக்கு அனைவரும் புறப்பட்டு மலையடிவாரத்திற்க்கு 9 மணிக்கு சென்றடைந்தோம்.
எங்களது மகிழ்வுந்தை நிறுத்த கட்டணம் 100(NOK) செலுத்தினோம். இங்கு பொதுவாக
தானியங்கு சீட்டு வழங்கும் இயந்திரம் (Automatic bill vending
machine) இருக்கும்.
நாம் எத்தனை
மணி நேரம் வாகனத்தை நிறுத்த வேண்டுமோ அதற்க்கான பணத்தை செலுத்தினால் சீட்டு கிடைக்கும்
அதனை மகிழ்வுந்தின் முன்பக்கம் பார்க்கும்படி வைத்துவிட்டு செல்லவேண்டும் இல்லாவிட்டால்
அபராதம் செலுத்தவேண்டியிருக்கும்.
சென்னையில்
வளர்ந்த காரணத்தால் அடர்ந்த செடிகளினூடோ இல்லை மரங்களின் நடுவோ பயணித்த அனுபவம்
கிடையாது. திரைப்படத்தில் மட்டுமே அடர்ந்த மரங்களின் நடுவே ஆங்காங்கே பொத்தல்களாக
நுழையும் சூரிய ஒளியைப் பார்த்திருக்கிறேன்.
நகைச்சுவைக்காக
ஒவ்வொரு 50 மீட்டர் கடந்தவுடன் நின்று இளைப்பாறி கலாட்டாவுடன் புகைபடமும்
எடுத்துக்கொண்டோம். இது மெற்க்கொண்டு நடக்க ஊக்கமளித்தது.
பொதுவாக மலை ஏறுபவர்கள் அனைவரும் தண்ணீர், தண்ணீர் கோப்பை மற்றும் சிறிய வாயு அடுப்பை வைத்திருப்பார்கள் களைப்பு ஏற்ப்படும்போது பயன்படுத்துவதற்க்காக எங்கள் குழுவிலும் மலை ஏறும் கலைஞர்கள் இருந்தார்கள் அவர்களது தயவினால் தே-நீர் சாத்தியமாயிற்று.
பயணம் தொடர்ந்தது, குறிப்பிட்ட உயரம் அடைந்ததும் ஏறுவது எளிதாக இருந்தது காரணம் பாதை செங்குத்தாக இல்லாமல் சற்று தட்டையாக இருந்தது.
ஒரு வழியாக பூதத்தின் நாக்கு போல் நீண்டுயிருக்கும் பாறையை அடைந்ததும் மகிழ்ச்சியை காட்டிலும் நிம்மதிதான் அனைவரிடத்திலும் காணப்பட்டது காரணம் 11.2 கி.மீ சுமார் 6.30 மணி நேரப்பயணம்.
அங்கு பார்த்தால் நம்ம திருப்பதி கோயில் தரிசன வரிசை போல், மிக நீண்ட வரிசை அந்த பாறையில் நின்று புகைப்படம் எடுப்பதற்க்காக.
இரவு 9 மணிக்கு தாழ்வாரத்தை அடைந்தோம் இது ஒரு மறக்கமுடியா பயணமாகவே அமைந்தது.
10 comments:
நான்றி திரு திண்டுக்கல் தனபாலன் அவர்களே, உங்களது
வாழ்த்திற்க்கும் ஊக்கம் தரும் செய்திக்கும்
மணக்கும் தமிழ்ச்சொல் மகிழுந்து! கண்டு
வணக்கம் வடித்தேன் வளைந்து!
கவிஞா் கி. பாரதிதாசன்
தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு
எனது பணிவான வணக்கம் கவிஞா் கி. பாரதிதாசன் அவர்களே, உங்களது
வருகைக்கும், உள்ளம் குளிரும் தமிழ் விமர்சனத்திற்க்கும்.
தங்கள் பயணத்தைப்
பசுமை மாறாமல்
படத்துடன் பகிர்ந்த
பாங்கு மகிழ்ச்சியைப்
பகர்கிறது நண்பா..
அழகான பதிவிற்கு நன்றி.
இணைந்த நட்பில் தொடர்ந்திருப்போம்.
அன்பு நண்பருக்கும் தங்கள் இல்லத்தாருக்கும் எனது அன்பு கலந்த தித்திக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்..
மிக்க நன்றி நண்பர் பாண்டியன் அவர்களே, உங்களது வருகைக்கும் திபாவளி வாழ்த்திற்க்கும்.
தங்களுக்கும் தங்களது குடும்பத்தாருக்கும் எனதினிய திபாவளி வாழ்துக்களை உரித்தாக்குகிறேன்.
இனிக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்
தூய தமிழ்மணக்க! நேய மனங்கமழ!
ஆய கலைகள் அணிந்தொளிர! - மாயவனே!
இன்பத் திருநாளாய் என்றும் இனித்திருக்க!
அன்பாம் அமுதை அளி!
கவிஞா் கி. பாரதிதாசன்
தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு
நார்வே பயண அனுபவம் சுவாரசியம்
troll பற்றிய கதைகள் நன்று
nice update, looking forward to see more from you.
also please send me your contact number. hope you have mine.
நண்பர் பாண்டியன் மூலமாகத் தங்களின் பதிவைப் பற்றி அறிந்தேன். தங்களது எழுத்துப்பணி தொடர வாழ்த்துக்கள்.
www.drbjambulingam.blogspot.in
www.ponnibuddha.blogspot.in
மிக அருமை. பகிர்வினிற்கு நன்றி..!
நண்பர்கள் தின வாழ்த்து அட்டைகள், வாழ்த்துகள், எஸ்.எம்.எஸ்.களுக்கு:
Happy Friendship Day 2014 Images
Post a Comment