Tuesday 1 November 2016

என்னம்மா இப்புடி பண்றிங்களேம்மா!!


கிராமத்தில் நீங்க அடிக்கடி கேட்ட கதை தான். அந்த கதையை நானும் சொல்றேன் இந்த பதிவு மூலமா…. 

ஓர் அடர்ந்த காட்டில் சாமியார் ஒருவர் அமைதியா வாழ்க்கையை ஓட்டிட்டு இருந்தார்.

பக்கத்தில் இருக்குற கிராம மக்கள் அவரை சந்தித்து தங்களது பிரச்சனைகளை சொல்லி அதற்கான தீர்வை கேட்டுவருவது வழக்கமாக இருந்தது.

ஒருசிலருக்கு தீர்வு கெடைச்சதனால மக்கள் அவரை கொண்டாட ஆரம்பிச்சிருந்தார்கள்.


புத்தர் பொண்டாட்டி தொல்லை தாங்காம காட்டுக்கு போனாரான்னு தெரியாது ஆனா இந்த சாமியார் அந்த வகையை சேர்ந்தவர்.

பொண்டாட்டி புள்ளைங்களோட அழகான வாழ்க்கை வாழணும்னு அவருக்கு "ஆசை" அந்த ஆசைக்காக மானம், மரியாதை இப்படி ஒன்னுஒன்னா விட்டுட்டு....... அதுக்கு மேல முடியாதுன்னு காட்டுக்கு வந்தவர்தான்

அந்த சாமியாரை பார்க்க ஒரு அழகான பெண்மணி வந்தாங்க, சாமியாருக்கு அவங்கள பார்த்ததில் பெருமகிழ்ச்சி.



அவங்களை உட்கார வைத்துவிட்டு என்ன விசயம்ன்னு கேட்டாரு.
அந்த பெண்மணி சொன்னாங்க, எனக்கும் என் வீட்டுக்காரருக்கும் எப்ப பார்த்தாலும் சண்டை எதுக்கெடுத்தாலும் சண்டை
என்ன செய்யறதுன்னே தெரியல என்றார்

சாமியார் : - எதுக்காகம்மா சண்டை வருது 

பெண்மணி : - அவுங்க வீட்டைப்பத்தி உண்மையை!! சொன்னாக்கூட அவருக்கு கோபம் வந்துரும், சண்டைபோட ஆரம்பிச்சுருவாரு

சாமியார் : - எம்மா அப்போ அடிப்பாரா உன்னை?

பெண்மணி : - ம்..யும் அடிக்கெல்லாம் மாட்டாரு, அடிச்சாருன்னா அந்த கையை உடைச்சி அடுப்புல போட்டுருவேன்னு அவருக்கு  தெரியாதா!! என்ன.

சாமியாருக்கு பிரச்சனை எங்கன்னு தெரிஞ்சிருச்சு இருந்தாலும் அந்த பெண்மணிக்கு உதவி செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருந்தாரு. அதனால அந்த பெண்மணியை அழைத்து நீ ஒன்னும் கவலை படாதே, உனக்கு எல்லாம் சரியாயிரும்.

ஆனா அதுக்கு நீ ஒரு சின்ன பரிகாரம் செய்யவேண்டியிருக்குன்னு சொன்னாரு

அதற்கு அந்த பெண்மணியும்,  என்னனு சொல்லுங்க சாமி அதை நிறைவேற்றி வைக்கிறேன்- ன்னு சொன்னாங்க. 

அப்ப அந்த சாமியாரு சொன்னாரு, ஒன்னும் பெருசாயில்லம்மா  இன்னும் ஒரு மணி நேரம் இந்த வழியா போனின்னா காட்டோட நடு பகுதிக்கு போயுருவே. அங்க ஒரு புலி இருக்கு, அந்த புலியோட மயிரை(முடியை) வெட்டி எடுத்து வந்தின்னா எல்லாம் சரியாயிரும் -ன்னாரு 



இப்ப அந்த பெண்மணிக்கு ஒரே அதிர்ச்சி என்னடா இது! நம்ம வீட்டுகாரரை என்னதான் கழுவி கழுவி ஊத்தினாலும், கொஞ்ச நேரம் வெறைப்பா அங்கையும் இங்கையும் என்னயாடி சொன்ன!!, எங்க வீட்டையாடி சொன்னன்னு!! திரிவாரு அப்புறம் கட்டிப்போட்ட நாய் மாதிரி வீட்டுக்குள்ளேதான் இருப்பாரு.

இது ஒரு பிரச்சனைன்னு இங்க வந்தா... நம்ம உயிர் போயிரும் போல-ன்னு நினைச்சாங்க

அப்ப சாமியாரு சொன்னாரு, கவலைப்படாதம்மா உன் அறிவு மேல நம்பிக்கை வை கட்டாயம் நீ வெற்றி பெருவேன்னு சொன்னாரு

அந்த பெண்மணியும் சரின்னு சொல்லிட்டு வீட்டுக்கு வந்துட்டாங்க

அப்புறம் ஒரு மாதம் கழித்து அந்த பெண்மணி புலியோட மயிரை எடுத்துட்டு வந்தாங்க

சாமியார்,  எப்படிம்மா முடுஞ்சிதுன்னு கேட்டாரு.

அதுக்கு அந்த பெண்மணி சொன்னாங்க, முதல்ல எனக்கும்  பயமா தான் இருந்தது. 

ஒரு பத்து   நாள் 5 கிலோ கறி  எடுத்துட்டு புலிகிட்டயிருந்து 100 அடி இடைவெளியில் வச்சிட்டு வந்துருவேன்.

அப்புறம் அடுத்த 10  நாள் 10 அடி  தூரத்தில் வச்சிட்டு வர ஆரம்பிச்சேன்.

அதுக்கு அப்புறம் பார்த்தா புலி எனக்காக காத்துட்டு இருக்க ஆரம்பிச்சிருச்சு நான் போன உடனே கறியை சாப்பிடும் அப்புறம் ஒரு குட்டி துக்கம் போடும் என் மடியில்.

அந்த சமயம் பார்த்து அதோட மயிரை வெட்டி எடுத்துட்டேன்னு சொன்னாங்க.

இப்ப சாமியாரு சொன்னாரு, ஒரு கொடிய மிருகம் அதையே 30 நாளிலே உன்னால சாதுவாக்கி  விளையாட முடியுது.

பாவும்மா உன் புருசன்!!, 

என்ன செஞ்சா ஒரு கொடிய மிருகம் கட்டுப்படும்னு தெரிஞ்ச உனக்கு உன் புருஷனை கட்டுப்படுத்துறதா?? பெரிய விசயம்.

என்ன செஞ்சாலும் குத்தம் கண்டுபிடிச்சி அவமானப்படுத்தறத நிறுத்தினாலே பாதி பிரச்சனை குறைஞ்சிரும்

மீதி தேவையில்லாத விசயங்கள் பேசுறத குறைச்சா,  போயிரும்.

உன் புருசனுக்கு 5 கிலோ கறி தேவையில்லை 5 நிமிடம் உன்னோட அன்பான பார்வை போதும்.
30 நாள் தேவையில்லை 3 நிமிடத்தில் உன் மடியில் கிடப்பான்.

அதுக்கு அந்த பெண்மணி சொன்னாங்க , அவர் பணிந்து போறதால ஏறி மிதிக்க ஆரம்பிச்சேன் அதனால அவர் எதிர்த்து பேசும்போது எட்டி மிதிக்கணும்னு தோணிச்சே ஒழிய அன்பா திருத்தணும்னு தோனவே இல்லை.

நல்ல வேலை சமயத்தில எனக்கு உறைக்கிற மாதிரி சொன்னிங்க, இனிமே என் புருசனை அன்பாவும் என் வீட்டை மகிழ்ச்சியாவும் வச்சிப்பேன்னு சொன்னாங்க.

சொல்லிட்டு தன் கணவரை பார்க்க வீட்டுக்கு ஓடினாள்.

அதை பார்த்ததும் சாமியாருக்கு மகிழ்ச்சி சந்தோசத்தில் கண்ணில் கண்ணீர் வர ஆரம்பிச்சுருச்சு 

(வேற ஒன்னும் இல்லை அந்த பெண்மணியின் அப்பாதான் இந்த சாமியார்!!).

"தாயைப் போல் பிள்ளை, நூலைப் போல் சேலை"



மகளை பெற்ற அப்பாக்களுக்குத்தான் தெரியும் மாப்பிள்ளை பாவமென்று!! :) :)



2 comments:

கரந்தை ஜெயக்குமார் said...

ஆகா
சாமியாரின் மகளா இவர்
அருமை

NSK said...

மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் அவர்களே, வருகைக்கும் வாழ்த்திற்கும்