திருவள்ளுவர்
:- தாமதமா வந்தேன்னு கோபமா
வாசுகி :-
உங்களுக்கு என் மீது காதல் இருந்திருந்தால் சீக்கிரம் வந்துருப்பிங்க....
திருவள்ளுவர் :-
இந்த உலகத்தில எல்லாரையும் விட, அதிகமா
உன்னைத்தான் காதலிக்கிறேன்
வாசுகி:- யாரையும் விடன்னா, அப்ப எத்தனை பேரை காதலிக்கிறே
யாரினும் காதலம் என்றேனா ஊடினாள்
யாரினும் யாரினும் என்று
யாரினும் யாரினும் என்று
திருவள்ளுவர்
:- நான் அந்த அர்த்தத்தில் சொல்லல.
இந்த
பிறப்பில் உன்னை தவிர வேறொருவரையும் காதலிக்க வில்லை, இப்ப சரியா
வாசுகி :- அப்போ
அடுத்த பிறவியில் பிரிஞ்சிருவீங்களா…..??
இம்மைப் பிறப்பில் பிரியலம் என்றேனாக்
கண்நிறை நீர்கொண் டனள்.
கண்நிறை நீர்கொண் டனள்.
திருவள்ளுவருக்கு தும்மலே வந்துருச்சி!!
வாசுகி :- நூறு வயசு
"திருவள்ளுவருக்கு அப்பாடா வாழ்த்திட்டா... நல்லவேளை இந்த பிரச்சனை இதோடு முடிந்தது, தப்பித்தோம் என்று நினைத்தார்."
வாசுகி:- ஆமா...., நான் உன் பக்கத்தில் இருக்கேன், அப்போ வேற யாரோ உன்ன நினைச்சிருக்காங்க அதனாலதானே தும்மின..
வழுத்தினாள் தும்மினேன் ஆக அழித்தழுதாள்
யாருள்ளித் தும்மினீர் என்று.
யாருள்ளித் தும்மினீர் என்று.
திருவள்ளுவர்:- தும்முனது ஒரு குத்தமா....!!
கணவன் தன் மீது உயிராக இருக்கிறான் என்று தெரிந்தும் அதை அவன் வாயால்
அடிக்கடி கேட்டு மகிழ்வது பெண்களின் செயல் என்று 3000 வருடங்களுக்கு முன்பே எழுதி வச்சுட்டாரு
நம்ம ஐயன் திருவள்ளுவர்
குறிப்பு: ஐயா தமிழ் கடல் நெல்லை கண்ணன், அவர்களது பேச்சை எழுத்தாக்கியிருக்கிறேன்
1 comment:
அருமை ஐயா... ரசித்தேன்...
Post a Comment