ஏற்கனவே
பலபேர் இதை பற்றிய தங்களது
கருத்தை பொது வெளியில் தெரிவித்திருக்கிறார்கள்.
முறையாக
நடுவண் அரசிடம் தங்களது எதிர்ப்பை/கருத்தை எத்தனைபேர் பதிவு
செய்திருக்கிறார்கள் என்று தெரியவில்லை.
வெளிநாட்டில்
வாழும் பல இந்தியர்களுக்கு குறிப்பாக
வட இந்தியர்களுக்கு ஹிந்தி தான் தேசிய மொழி
என்ற எண்ணம்
உண்டு .
அது
அப்படி இல்லை என்று எடுத்து
சொன்னால், வில்லனா ஆக்குவதுமட்டுமல்லாமல் தேசபற்றை கேள்விக்குறியாக்கிருவானுங்க.
இப்படி
இருக்க
மத்திய
அரசின் வேலை வாய்ப்புகளில் ஹிந்தி
மற்றும் ஆங்கிலம் என்று மாநில மொழிகளை புறக்கணிப்பதுவும்.
மும்மொழி கல்வி கொள்கையை கொண்டு வருவதும் எங்க
கொண்டு பொய் நிறுத்த போகுதோ.
சமீபத்தில்,
ஒரு விருந்தின் போது, கர்நாடகத்தை பூர்விகமாக கொண்ட இந்தியர், நீங்க இலங்கையா என்று என்னிடம் கேட்டார்.
நான்
ஒரு இந்தியன், தமிழ் நாட்டை சேர்ந்தவன் என்று பதிலயளித்தேன்.
அதற்கு
அந்த அம்மையார் சிரித்துவிட்டு, அது எனக்கு ஏற்கனவே
தெரியும், உங்க மாநிலத்து மக்களுக்கு
பொதுவா ஹிந்தி தெரியாதில்லையா, அதனாலத்தான் "நாங்க" இப்படி கேட்போம் என்றார்.
"நாங்க"
என்றால்..... என்றதற்கு வட இந்தியர்களாம்...
அவர்கள்
அப்படிதான் பேசுவார்கள் (ஏற்கனவே அனுபவம் இருக்கு பதிலடியும் கொடுத்திருக்கிறேன்)
நீங்க
ஏன் இதுல
கூட்டு சேர்கிறீர்கள் , கர்நாடகம் என்ன வட இந்தியாவா
என்றால்...
அவங்க
ஊரு மகாராஷ்டிரா பக்கத்திலையாம் (*** மலர்ந்தே தீரும் கோஷ்டியோட பதில் மாதிரி இருக்கில்ல.)
அவரிடம்
மேற்க்கொண்டு என்ன பேசமுடியும்...
பக்கத்தில் இருந்த syria வை சேர்ந்த அலுவலக தோழர், எங்க ஊர்லையும் இதே பிரச்சனைதான் என்றார்.
என்னவென்று விசாரித்தால், அங்க அரபி யை திணிக்கிறார்களாம். அவரோட தாய் மொழி குருதிஸாம்.
*
சின்ன நாடு தான் சிங்கப்பூர், மூன்று மொழிக்கு சமமான மரியாதை கொடுக்கிறார்கள்.
பெரிய நாடு இந்தியா ஒரு மொழியை திணிப்பதற்கு எவ்வளவு மெனக்கெடுகிறார்கள்.
வாழ்க பாரதம்
என்னவென்று விசாரித்தால், அங்க அரபி யை திணிக்கிறார்களாம். அவரோட தாய் மொழி குருதிஸாம்.
*
சின்ன நாடு தான் சிங்கப்பூர், மூன்று மொழிக்கு சமமான மரியாதை கொடுக்கிறார்கள்.
பெரிய நாடு இந்தியா ஒரு மொழியை திணிப்பதற்கு எவ்வளவு மெனக்கெடுகிறார்கள்.
வாழ்க பாரதம்
No comments:
Post a Comment