Wednesday 28 August 2019

நகல் கதாநாயகன் Vs அசல் கதாநாயகன்



(Reel Hero) நகல் கதாநாயகன் Vs (Real Hero)அசல் கதாநாயகன்

ஒன்று இரண்டு படங்களில் நடித்தவுடன், இளசுகளின் தலைவன் ஆகிறலாம்.. (பேர கேட்டாலே போதும் விசில் சத்தம் காத பிளக்கும்... தலைவா!)

அப்புறம் சினிமாவில் வாய்ப்பு இல்லை என்றாலும், உடல் நலக்குறைவு என்றாலும்  மக்கள் தலைவனா மாறி அரசியலுக்கு வந்திரலாம்.


இங்க யாரையும் குறை சொல்ல முடியாது. காரணம் அவனுக்கு செல்வாக்கு இருக்கு பயன்படுத்திகிறான், உனக்கேன் வயிறு எரியுது  என்று சில அதி மேதாவிகள் சொல்லக்கூடும்.

இங்க உண்மையான தலைவன் யாரு என்பதை, இளசுகளுக்கும் மாணவர்களுக்கும் கொண்டு சேர்ப்பது நமது கடமை என்று உணரணும்.

 ஒரு சினிமா நடிகனுக்கு (நகல் கதாநாயகனுக்கு) பிரச்சனை என்றால், ரசிகர்களும்,  ஊடகங்களும் அணிதிரண்டு நிற்ப்பார்கள். அதனால அவர்களை  எதிர்க்க அரசியல் நரிகளே பயப்படுவார்கள்.

அதுவே ஒரு சமூக போராளிக்கு (அசல் கதாநாயகனுக்கு) பிரச்சனை  என்றால் உணர்வுள்ள வெகு சிலரே துணையாக வருவார்கள். அதனால அவர்கள் மேல் பொய் வழக்கு போடுவது பெரிய விசயமில்லை.

வரும் தலைமுறையினர் யாருக்கு பின்னாடி நாம் அணி திரளவேண்டும் என்பதை சற்று சிந்திக்க வேண்டும்.

தோழர் முகிலன் அவர்களை கொண்டாடும் ஒரு கூட்டம் இருந்திருந்தால், அவர் வேட்டையாடப்பட்டிருக்க மாட்டார்.
எனக்கு பிடித்தவர்களை கொண்டாடுங்க என்று சொல்ல வில்லை,

நாட்டுக்காக பணி "புரியும் / இறந்த" வீரர்களை கொண்டாடுங்கள்,
இயற்க்கையை பாதுகாக்க "போராடிய / மடிந்த" இயற்க்கை காவலர்களை கொண்டாடுங்கள்.
சமூக அறம் காக்க "போராடிய / மடிந்த" சமூக சீர்திருத்தவாதிகளை கொண்டாடுங்கள்.

குறைத்த பட்சம் அவர்களது பெயர்களையாவது நினைவில் கொள்ளுங்கள்.

நடிகன், அவன் தேவைக்காக மட்டுமே திரைப்படங்களில் நடிக்கிறார் அவரை கொண்டாடுறோம்.

நமக்காக போராடும் தோழர்கள் (அசல் கதாநாயகர்கள்), மதிக்க படுவது கூட இல்லை.
அவர்கள் மதிக்கப்பட்டால், நமது சமூகத்தால் அவர்கள் கொண்டாடப்பட்டால், உலகம் போற்றும் சிறந்த குடிமக்கள் நாமாகத்தான் இருப்போம்.
 
**கலையை ரசிப்பதில் தவறேதும்  இல்லை. சினிமாவில் பார்ப்பது போன்றே, உண்மையில் இருப்பார்கள்  என்று நம்புவதுதான் முட்டாள்த்தனம்
 
**உண்மையான கதாநாயகர்களை, அடையாளப்படுத்துங்கள், பாராட்டுங்கள், அதை  விட அவர்களுக்கு துணையாக நிற்பது மிக மிக அவசியம்.

No comments: