Wednesday 23 November 2022

போலிகள் நெடுநாள் நிலைக்க முடியாது

 தேவை கருதி மட்டுமே சுயநலமாக பழகுபவர்கள் இச்சமூகத்தில் இருக்கத்தான் செய்வார்கள்.

அப்படியான நபர் ஒருவர் தான் ரங்கராஜ், அவர் அந்த ஊரின் தலைவர்  கந்தன் ஐ  தனது  வீட்டிற்கு அழைத்து விளம்பரம் தேடிக்கொள்ள நினைத்தார். அந்த பெரியவர் கந்தனும்  வருவதாக ஒப்புக்கொண்டார்.


கந்தன் பணம், செல்வாக்கில் மட்டுமல்ல குணத்திலும் பெரியவர். எல்லோரிடமும் ஒரே மாதிரியான அன்பு நேசம் கொண்டவர். ரங்கராஜனை பற்றியும் அறிந்திருந்தார்


ஒரு மாலை வேளையில் கந்தன் தன்   பேரனுடன் ரங்கராஜ் வீட்டிற்கு சென்றார். ரங்கராஜனோ அவரை வரவேற்று, வசதிபடைத்த விருந்தினருக்கு என்று தான் வைத்திருக்கும் கண்ணாடி குவளையில் தேநீர் கொடுத்தார்.


கந்தனின் பேரனோ எந்த லாபகமுமின்றி விருட்டென பிடிங்கி குடிக்க தொடங்கினான்.

 
எங்கே கண்ணாடி குவளையை உடைத்து விடுவானோ என்ற பதற்றம் ரங்கராஜனுக்கு தொற்றிக் கொண்டது.

அதை கவனித்த கந்தனின் பேரனோ, கண்ணாடி  குவளையை சட்டென்று கீழே வைத்து , சடசடவென எழுந்து தன் தாத்தாவின் கரம் பற்றி இழுத்து வாசல் வரை சென்றவன் நின்றான்.
 
 திரும்பினான்... ரங்கராஜனின் முகம் பார்த்து சொன்னான்
 
"பொருள்கள் பயன்படுத்துவதற்கானது
மனிதர்கள் நேசிப்பதற்க்கானவர்கள்

நீங்கள் பொருள்களை நேசிக்கிறீர்கள்
மனிதர்களை பயன்படுத்துகிறீர்கள்"
 
என்று சொல்லிவிட்டு விருட்டென தாத்தாவுடன் சென்றுவிட்டான்


-முனைவர் ஜா.சலேத் அவர்களது கவிதையால் ஈர்க்கப்பட்டு அடியேன்  எழுதிய சிறுகதை

 

No comments: