பள்ளி பருவத்தில் போகாத பயணத்திற்கு பயண கட்டுரை எழுதி மதிப்பெண் பெற்ற அனுபவமுண்டு அதன் பின் பல பயண அனுபவம் இருந்தும் பயண கட்டுரை எழுத தோன்ற வில்லை காரணம்,
பலரது பயணக்கட்டுரை தங்களை விளம்பரபடுத்தி கொள்வதாகவே இருக்கும்
சிலரது பயணக்கட்டுரை நம்மையும் அவ்விடம் செல்லும் ஆவலை தூண்டுவதாக இருக்கும்
ஒரு சிலரது பயணக்கட்டுரை நாமும் அவ்விடம் சென்று வந்ததை போன்ற உணர்வை கொடுக்கும்
எனது பயண கட்டுரையும் சுய விளம்பரம் அதிகமாக காணப்பட்டதால் இந்நாள் வரை அவை எனது diary குறிப்பாகவே இருக்கிறது
இம்முறை சுய விளம்பரத்தை குறைத்து எழுத முயற்சிக்கிறேன்
இனி....
MOLDE வில் இருந்து BJORLI சென்று வந்த அனுபவ குறிப்பு
MOLDE வில் இருந்து BJORLI சுமார் 107 KM தொலைவில் உள்ளது
MOLDE பத்தி சொல்லனும்னா NORWAY இல் இது ஒரு சின்ன நகரம், மொத்தம் 363 சதுர KM பரப்பளவு கொண்டது, 2010 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கு படி 24795 பேர் கொண்ட நகரம்.
BJORLI பத்தி சொல்லனும்னா NORWAY வில் பனி சறுக்கு விளையாட ஏற்ற இடங்களில் இதுவும் ஒன்று
நாங்கள் ஐந்து பேர் 10.00 மணிக்கு ஒன்று கூடுவதென்று முடிவுசெய்திருந்தோம்
ஆளாளுக்கு ஒரு பொறுப்பு கொடுக்க பட்டிருந்தது எல்லாரும் சிறு சொதப்பல்கள் செய்திருந்தார்கள்
நான் சீட்டு கட்டு வாங்க மறந்திருந்தேன். (பனிச்சறுக்கு விளையாடப்போவது எங்கள் நோக்கமல்ல ஏனெனில் அன்றைய தினம் வெப்பநிலை -30 என்பதால்)
ஒருவர் பயணத்தின் ஊடே செல்லவேண்டிய Ferry நேரத்தை தவறாக குறிப்பிட்டதால் வெகு நேரம் காத்திருக்க வேண்டிருந்தது.
இருவர் ஒரு நாள் கூத்துக்கு ஒரு மாதத்திற்கு தேவையான உடமைகளுடன் வந்திருந்தனர்.
ஒரு வழியாக 10.25 க்கு புறப்பட்டோம் இடையில் sølsness ferry முனையை அடைந்த போது எங்களது குழுவில் ரவி தேஜா என்றழைக்கப்படும் AMK சிற்றுண்டிக்காக Ferry அருகில் உள்ள கடைக்கு சென்றார் அவருடன் நானும் பயணித்தேன்.
அவர் சைவம் என்பதால் அவருக்கு அங்கு எதுவும் கிடைக்கவில்லை அவரது நிலையை பார்த்து, பரிதாபப்பட்ட கடை உழியர் (பிலிப்பைன்ஸ் பெண் )மன்னித்து கொள்ளுங்கள் வழக்கமாக நாங்கள் சைவம் மற்றும் அசைவ உணவுகளை விற்பனைக்கு வைப்போம். ஆனால் சைவ உணவின் விற்பனை மிக குறைவு என்பதால் அதனை நிறுத்திவிட்டோம் என்றார்.
அதன் பின்பு நண்பர் அவருடன் போட்ட கடலையின் விளைவால், மாதத்திற்கு ஒருமுறை நாங்கள் சைவ உணவை விற்பனைக்கு வைப்போம் அப்பொழுது அருகில் உள்ள அனைத்து ஆசிய சைவ பிரியர்களும் சாப்பிட வருவார்கள் நீங்களும் வாருங்கள் என்று ஓர் விண்ணப்பத்தை வைத்தார்.
அதற்குள் Ferry வந்ததின் பொருட்டு car ல் உள்ள நண்பர்கள் கைத்தொலைபேசி அழைப்பு விடுத்ததால் அங்கிருந்து விடைபெற்றோம்.
Ferry பயணம் என்பது அங்குள்ள மக்களுக்கு ஓர் அன்றாட நிகழ்வு ஏனெனில்
" நார்வே பல குட்டி தீவுகளின் மொத்தம்"
ஆனால் புதிதாக செல்வோருக்கு, மிகபெரிய அதிசயம், பெரும் மலைகளின் ஊடே பரவியிருக்கும் கடலின் மீது பயணம், ஓவியத்தில் மட்டும் பார்க்க முடிந்த இயற்க்கை வளத்தை நேரில் பார்க்கலாம்.
பனிக்காலத்தில் பனியை வெள்ளையுடையாகவும், கோடைக்காலத்தில் புற்களை பச்சையுடையாகவும் போர்த்தி அழகு தேவதையாய் காட்சி தரும். ferry பயணம் முடிந்து கார் பயணத்தை தொடங்கினோம்.

வழியெங்கும் வெண்போர்வை போர்த்திருந்தது ஆங்காங்கே சில நீரோடைகள் கண்ணாடியாக மாறி இருந்தது. அதன் மீது சிலர் சறுக்கி விளையாடி கொண்டிருந்தனர்.

நாங்களும் car ஐ ஓரிடத்தில் நிறுத்தி விளையாட சென்றோம் " -20 டிகிரி பலமான காற்று" 5 நிமிடத்திற்கு மேல் எங்களால் அங்கு நிற்க முடியவில்லை ஓடி.. வந்துட்டோம் car க்கு
பலவற்றை பேசிக்கொண்டு பயணம்.

நாலு பெண்கள் சேர்ந்தா என்ன பேசுவாங்கன்னு தெரியாது ஆனா நாலு ஆண்கள் சேர்ந்தா கண்டிப்பா அரசியலும், சினிமாவும் இல்லாமல் இருக்காது. எல்லாரையும் திட்டிட்டு இருந்தோம் ஏன்னா இந்த இரண்டிலும் நல்லவனை யாருக்குமே தெரியாது அப்படி இருந்தாலும் அவங்களை, நாம என்னைக்கு தூக்கி விட்டுருக்கோம்.
இரண்டு மணி நேர பயணத்தில் நாங்கள் செல்ல வேண்டிய இடம் சென்றடைந்தோம்.

Bjorli இல் ஒவ்வொரு வீடும் மிக தேர்ந்த வடிவமைப்புடன் இருக்கும் கூரை 30 டிகிரி கோணத்தில் வடிவமைக்க பட்டிருக்கும் ஏனெனில் ஆண்டில் அதிக மாதங்கள் இங்கு பனி பொழிவதால் கூரையின் மேல் விழும் பனி எளிதாக வழிந்தொடும்படி வடிவமைக்க பட்டிருக்கிறது.

சரியாக மதிய நேரத்திற்கு வந்து சேர்ந்ததால் அனைவருக்கும் பசிக்க துடங்கியது எனவே அருகில் உள்ள பெட்ரோல் நிலையத்தில் pizza வாங்கி ஒரு வெட்டு வெட்டினோம். அதன் பின் சிறிது இளைப்பாறி விட்டு நிச்சல் குளத்திற்கு குளிக்க சென்றோம்.

நீச்சல் குளம் இருக்கும் கட்டிடமானது 50 பேர் குளிக்கக்கூடிய நீச்சல் தொட்டி, 10 பேர் அமரகூடிய SPA, 8 பேர் அமரகூடிய bubble bath தொட்டி, snow bowling, உணவருந்தும் இடம் துணி மாற்றும் இடம் மற்றும் 4 shower களுடனும் கூடியது.
இங்கு வருபவர்கள் shower ல் சிறிது நேரம் நின்று விட்டு நீச்சல் தொட்டிக்கு செல்வார்கள் அங்கிருந்து bubble bath அதன் பின் SPA இறுதியாக மறுபடியும் shower ல் நன்றாக குளித்துவிட்டு செல்வார்கள். ஆனால் நாங்கள் யாரும் கனிக்க முடியாத வகையில் குளத்தில் 5 நிமிடம், SPA வில் 5 நிமிடம் திரும்பி bubble bath மீண்டும் குளம் அதன்பின் SPA தொடர்ந்து 4 அல்லது 5 மணி நேரம் அந்த இடத்தை விட்டு நகரவில்லை. அங்க இருந்த எல்லாரையும் ஒரு வழியாக அனுப்பி வைத்துவிட்டு நாங்களும் அந்த இடத்தை விட்டு கிளம்பினோம்.
சுவாரஸ்யமான விஷயம் என்னனா, இங்கு பெரும்பான்மையினர் shower ல் நிர்வாணமாகத்தான் குளிப்பார்கள் மூடின அறையா இருந்தாலும் சிறு ஆடையுடன் குளித்து பழக்கப்பட்டவர்களுக்கு கொஞ்சம் வியப்பாகத்தான் இருக்கும். அப்புறம் bubble bath ல் குளித்து கொண்டிருக்கும் போது அங்கிருந்து அப்படியே வெற்றுடம்புடன் கட்டிடத்திற்கு வெளியே -20 டிகிரி ல் ஓடி சென்று அங்கிருந்து பனிக்கட்டிகளை அள்ளிக்கொண்டு வந்து இங்கு bubble bath ல் உட்கார்ந்து இருப்பவர்கள் மீது எரிகிறார்கள் இந்த கிறுக்குத்தனமான வேலையை பெரும்பாலோர் செய்கிறார்கள்.

இரவு மது சீட்டு என்று வெகு நேரம் பொழுதை போக்கினோம் மறுநாள் காலை எழுந்து மறுபடியும் நீச்சல் குளம் அதன்பின் மதிய உணவிற்கு பின் வீடு திரும்பினோம்
இந்த பயணத்தை நாங்களும் மறக்க மாட்டோம் அங்கு இருந்தவர்களும் மறக்க மாட்டார்கள்
பலரது பயணக்கட்டுரை தங்களை விளம்பரபடுத்தி கொள்வதாகவே இருக்கும்
சிலரது பயணக்கட்டுரை நம்மையும் அவ்விடம் செல்லும் ஆவலை தூண்டுவதாக இருக்கும்
ஒரு சிலரது பயணக்கட்டுரை நாமும் அவ்விடம் சென்று வந்ததை போன்ற உணர்வை கொடுக்கும்
எனது பயண கட்டுரையும் சுய விளம்பரம் அதிகமாக காணப்பட்டதால் இந்நாள் வரை அவை எனது diary குறிப்பாகவே இருக்கிறது
இம்முறை சுய விளம்பரத்தை குறைத்து எழுத முயற்சிக்கிறேன்
இனி....
MOLDE வில் இருந்து BJORLI சென்று வந்த அனுபவ குறிப்பு
MOLDE வில் இருந்து BJORLI சுமார் 107 KM தொலைவில் உள்ளது

ஆளாளுக்கு ஒரு பொறுப்பு கொடுக்க பட்டிருந்தது எல்லாரும் சிறு சொதப்பல்கள் செய்திருந்தார்கள்
நான் சீட்டு கட்டு வாங்க மறந்திருந்தேன். (பனிச்சறுக்கு விளையாடப்போவது எங்கள் நோக்கமல்ல ஏனெனில் அன்றைய தினம் வெப்பநிலை -30 என்பதால்)
ஒருவர் பயணத்தின் ஊடே செல்லவேண்டிய Ferry நேரத்தை தவறாக குறிப்பிட்டதால் வெகு நேரம் காத்திருக்க வேண்டிருந்தது.
இருவர் ஒரு நாள் கூத்துக்கு ஒரு மாதத்திற்கு தேவையான உடமைகளுடன் வந்திருந்தனர்.
ஒரு வழியாக 10.25 க்கு புறப்பட்டோம் இடையில் sølsness ferry முனையை அடைந்த போது எங்களது குழுவில் ரவி தேஜா என்றழைக்கப்படும் AMK சிற்றுண்டிக்காக Ferry அருகில் உள்ள கடைக்கு சென்றார் அவருடன் நானும் பயணித்தேன்.
அதன் பின்பு நண்பர் அவருடன் போட்ட கடலையின் விளைவால், மாதத்திற்கு ஒருமுறை நாங்கள் சைவ உணவை விற்பனைக்கு வைப்போம் அப்பொழுது அருகில் உள்ள அனைத்து ஆசிய சைவ பிரியர்களும் சாப்பிட வருவார்கள் நீங்களும் வாருங்கள் என்று ஓர் விண்ணப்பத்தை வைத்தார்.
அதற்குள் Ferry வந்ததின் பொருட்டு car ல் உள்ள நண்பர்கள் கைத்தொலைபேசி அழைப்பு விடுத்ததால் அங்கிருந்து விடைபெற்றோம்.
Ferry பயணம் என்பது அங்குள்ள மக்களுக்கு ஓர் அன்றாட நிகழ்வு ஏனெனில்
" நார்வே பல குட்டி தீவுகளின் மொத்தம்"
ஆனால் புதிதாக செல்வோருக்கு, மிகபெரிய அதிசயம், பெரும் மலைகளின் ஊடே பரவியிருக்கும் கடலின் மீது பயணம், ஓவியத்தில் மட்டும் பார்க்க முடிந்த இயற்க்கை வளத்தை நேரில் பார்க்கலாம்.
பனிக்காலத்தில் பனியை வெள்ளையுடையாகவும், கோடைக்காலத்தில் புற்களை பச்சையுடையாகவும் போர்த்தி அழகு தேவதையாய் காட்சி தரும். ferry பயணம் முடிந்து கார் பயணத்தை தொடங்கினோம்.

வழியெங்கும் வெண்போர்வை போர்த்திருந்தது ஆங்காங்கே சில நீரோடைகள் கண்ணாடியாக மாறி இருந்தது. அதன் மீது சிலர் சறுக்கி விளையாடி கொண்டிருந்தனர்.

நாலு பெண்கள் சேர்ந்தா என்ன பேசுவாங்கன்னு தெரியாது ஆனா நாலு ஆண்கள் சேர்ந்தா கண்டிப்பா அரசியலும், சினிமாவும் இல்லாமல் இருக்காது. எல்லாரையும் திட்டிட்டு இருந்தோம் ஏன்னா இந்த இரண்டிலும் நல்லவனை யாருக்குமே தெரியாது அப்படி இருந்தாலும் அவங்களை, நாம என்னைக்கு தூக்கி விட்டுருக்கோம்.

Bjorli இல் ஒவ்வொரு வீடும் மிக தேர்ந்த வடிவமைப்புடன் இருக்கும் கூரை 30 டிகிரி கோணத்தில் வடிவமைக்க பட்டிருக்கும் ஏனெனில் ஆண்டில் அதிக மாதங்கள் இங்கு பனி பொழிவதால் கூரையின் மேல் விழும் பனி எளிதாக வழிந்தொடும்படி வடிவமைக்க பட்டிருக்கிறது.

சரியாக மதிய நேரத்திற்கு வந்து சேர்ந்ததால் அனைவருக்கும் பசிக்க துடங்கியது எனவே அருகில் உள்ள பெட்ரோல் நிலையத்தில் pizza வாங்கி ஒரு வெட்டு வெட்டினோம். அதன் பின் சிறிது இளைப்பாறி விட்டு நிச்சல் குளத்திற்கு குளிக்க சென்றோம்.

நீச்சல் குளம் இருக்கும் கட்டிடமானது 50 பேர் குளிக்கக்கூடிய நீச்சல் தொட்டி, 10 பேர் அமரகூடிய SPA, 8 பேர் அமரகூடிய bubble bath தொட்டி, snow bowling, உணவருந்தும் இடம் துணி மாற்றும் இடம் மற்றும் 4 shower களுடனும் கூடியது.
இங்கு வருபவர்கள் shower ல் சிறிது நேரம் நின்று விட்டு நீச்சல் தொட்டிக்கு செல்வார்கள் அங்கிருந்து bubble bath அதன் பின் SPA இறுதியாக மறுபடியும் shower ல் நன்றாக குளித்துவிட்டு செல்வார்கள். ஆனால் நாங்கள் யாரும் கனிக்க முடியாத வகையில் குளத்தில் 5 நிமிடம், SPA வில் 5 நிமிடம் திரும்பி bubble bath மீண்டும் குளம் அதன்பின் SPA தொடர்ந்து 4 அல்லது 5 மணி நேரம் அந்த இடத்தை விட்டு நகரவில்லை. அங்க இருந்த எல்லாரையும் ஒரு வழியாக அனுப்பி வைத்துவிட்டு நாங்களும் அந்த இடத்தை விட்டு கிளம்பினோம்.
சுவாரஸ்யமான விஷயம் என்னனா, இங்கு பெரும்பான்மையினர் shower ல் நிர்வாணமாகத்தான் குளிப்பார்கள் மூடின அறையா இருந்தாலும் சிறு ஆடையுடன் குளித்து பழக்கப்பட்டவர்களுக்கு கொஞ்சம் வியப்பாகத்தான் இருக்கும். அப்புறம் bubble bath ல் குளித்து கொண்டிருக்கும் போது அங்கிருந்து அப்படியே வெற்றுடம்புடன் கட்டிடத்திற்கு வெளியே -20 டிகிரி ல் ஓடி சென்று அங்கிருந்து பனிக்கட்டிகளை அள்ளிக்கொண்டு வந்து இங்கு bubble bath ல் உட்கார்ந்து இருப்பவர்கள் மீது எரிகிறார்கள் இந்த கிறுக்குத்தனமான வேலையை பெரும்பாலோர் செய்கிறார்கள்.

இரவு மது சீட்டு என்று வெகு நேரம் பொழுதை போக்கினோம் மறுநாள் காலை எழுந்து மறுபடியும் நீச்சல் குளம் அதன்பின் மதிய உணவிற்கு பின் வீடு திரும்பினோம்
இந்த பயணத்தை நாங்களும் மறக்க மாட்டோம் அங்கு இருந்தவர்களும் மறக்க மாட்டார்கள்
2 comments:
Kadayalla nijam mathiri nijame varalaye......
அனானி அவர்களே புரியும்படி கூறுங்கள்
Post a Comment