Wednesday 3 August 2011

சுலோக்சனா (என்கிற) சொப்பன சுந்தரி !

நீண்ட நாளைக்கு பிறகு நண்பர் ஒருவரை shopping mall ல சந்தீக்க நேர்ந்தது அவருடன் பேசிக்கொண்டிருக்கையில், அங்கு பெரிய சலசலப்பு தூரத்தில் ஒரு பெண்மணி கூட்டத்தை கடந்து வந்து கொண்டிருந்தாள்.



கடை ஊழியர்கள், அனைவரையும் ஓரமாக இருக்கும்படியும், அப்பெண்மணிக்கு வழி விடும்படியும் கேட்டு கொண்டிருந்தனர்.

நண்பர் கடை ஊழியரிடம் யார் அந்த பெண்மணி என்று கேட்டதற்கு கடை ஊழியர் அளித்த பதில் எனக்கு எரிச்சலை ஊட்டியது அவள் பெரிய அரசியல்வாதியின் வப்பாட்டியாம்!!

"ஏன்டா யாருக்குதான் மரியாதையை கொடுக்கணும்னு வெவஸ்தையே இல்லாம போயிடுச்சே" என மனம் கனத்தது.

ஒழுக்கத்திற்கு பாட புத்தகத்தில் மட்டும் தான் மரியாதை போல என்று மனதில் நினைத்து கொண்டு வெறுப்பாய் அவளை திரும்பி பார்த்தேன். அவள் அருகில் வர வர யார் அவள் என்பதை அறிந்து அதிர்ந்தேன்!

அவள்... அவள்.... சுலோக்சனாவே தான். பல நாட்கள் என் தூக்கத்தை கெடுத்தவள்

அவள் என்னை பார்க்கும் முன்னர் வேறு திசையில் திரும்ப நினைக்கையில் அவள் என்னருகில் வந்துவிட்டாள்.

சுலோக்சனா :- நீங்க ராகுல் தானே?

நான் :- ஆமா என்று தலை அசைத்தேன்

சுலோக்சனா :- உங்களுக்கு என்னை அடையாளம் தெரியலையா?
நான் தான் சுலோக்சனா. உங்க மனைவி குழதைகள் எல்லாம்
சந்தோசமாக இருக்காங்களா என்று முகமலர்ச்சியோட கேட்டாள்.

நான் :- அதற்க்கு மேல் என்னால் எதுவும் பேச முடியவில்லை
என் இதய துடிப்பு அதிகரித்தது. சுலோக்சனா என்னை மன்னிச்சிருங்க
என்று தலை குனிந்து நின்றேன்

சுலோக்சனா :- நீங்க ஏன் தலை குனிந்து நிக்கறீங்க

நான் :- உங்களை போய் விபச்சார விடுதியில் விட்டுட்டு வந்துட்டேனே.
அத நினைத்து நினைத்து எனக்கு பல நாட்கள் தூக்கமே கிடையாது

சுலோக்சனா :- அட அத நீங்க இன்னும் மறக்கலையா? நீங்க வேணும் என்று
அப்படி பண்ணலையே, எங்கப்பா உங்க மனைவிகிட்ட தப்ப நடக்க
நினைச்சாரு. கோபப்பட்ட நீங்க என்ன கடத்தி கொண்டு போய்
விபசார விடுதியில் விட்டுடீங்க. இதுல உங்க தப்பு எதுவும்
இல்லை. ஒரு அயோக்கியனுக்கு மகளாய் பிறந்த என் தப்பு தான்.
அப்பனோட சொத்து மட்டும் இல்லைங்க பாவத்தையும்
பகிர்ந்துக்கனும்னு விதி போல.

நான் :- உங்கப்பா பண்ண தப்புக்கு உங்களை தண்டிச்சிட்டேனே

சுலோக்சனா :- அட அத நினைத்து நீங்க கவலைபடாதிங்க,
உண்மையை சொல்லனும்னா அப்படி ஒரு கேடுகேட்டவனுக்கு
மகளாய் இருக்கறத விட விபச்சாரிய இருக்கறது பெருசா வருத்தமா இல்லை



என்று சொல்லி கண்ணீரோடு அந்த இடத்தை விட்டு போனாள் சுலோக்சனா.....

* பிள்ளைகளுக்கு சொத்து சேர்த்து வைக்கணும் என்று அவசியமில்லை, எந்த பாவத்தையும் சேர்த்து வைக்காம இருந்தா போதும்.

4 comments:

DHANS said...

attakaasam :)

NSK said...

நன்றி dhans

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
NSK said...
This comment has been removed by the author.