டேய் தம்பி பாப்பா அம்மா வைத்துக்குள்ளயிருந்து வெளிய வந்துட்டான் வா மருத்துவமனைக்கு
அப்புடின்னு என் செல்ல குட்டிகிட்ட சொன்னதுக்கு " அப்பா பாப்பாவ புடிச்சி அம்மா வைத்துக்குள்ள போட்டுரலாம்னு சொன்னான்"
ஒரு கணம் சிரிப்பு வந்தாலும் என்ன சொல்லி அவனுக்கு புரிய வைப்பதென்பதை விட தம்பி பாப்பாவ அவன் எப்படி எடுத்துக்குவான் என்பதுதான் ஒரே கேள்வியா இருந்தது.
ஏன்னா, 3 வயதுதான் என்பதனால் அவனுக்கு ஓராயிரம் கேள்வி வரும் எல்லாத்தையும் அவனுக்கு புரிய வைக்கணும், எவ்வளவு துரம் அவனுக்கு புரியும்னு தெரியாது ஆனால் எல்லாத்தையும் ஞாபகமா வச்சிருப்பான், சரியான் சந்தர்ப்பத்தில் அதை பயன் படுத்துவான்.
மெதுவிருக்கையில்(sofa) எகிறி குதித்து விளையாடுவான் டேய் அம்மா பாவம்டா அவங்களை தொல்லை பண்ண கூடாதுன்னு சொல்லி வச்சிருந்தேன்.
எப்பல்லாம் என் மனைவிகிட்ட சின்ன வாக்குவாதம் வருதோ அப்போ பக்கத்தில வந்து அப்பா, அம்மா பாவம் அப்படி பேசாதீங்கன்னு சொல்லுவான்.
ஒருபக்கம் அவன் கேள்விக்கு பதில் சொல்வது பொறுமையை சோதிக்கற விசயமா இருந்தாகூட இன்னொருவிதத்தில அவன் அதை சரியான சந்தர்ப்பத்தில் பயன்படுத்தும்போது வியப்பாகவும், சந்தோசமாகவும் இருக்கும்.
மருத்துவமனையில அவனுக்காக காத்திட்டு இருந்தேன் ரொம்ப ஆவலாக எதிர் பார்த்த தருணம் அது. அவனை என் நண்பர் அழைத்துக்கொண்டு வந்தார்.
அம்மா மடியில தம்பி பாப்பாவ பாக்குறான், தம்பி பாப்பாவான்னு கேக்குறான். ஆமாண்டா தம்பி பாப்பாவ நண்பர்கிட்ட குடுத்திறலாமான்னு..? கேட்டதுக்கு,
இல்ல தம்பி பாப்பா எனக்கு வேணும் நான் வச்சிக்குவேன்னு சொல்லிட்டான். பதட்டத்தோட எதிர்பார்த்த எனக்கு, ரொம்ப இயல்பா முடிந்தது சந்தோசமாக இருந்தது.
ஆனால் செல்ல குட்டி, பூனை குட்டி, குட்டி இதுக்கெல்லாம் காப்புரிமை வாங்கியிருக்கான். தம்பி பாப்பாவ இந்த பெயர்களை வைத்து அழைத்தொமென்றால் அருகில் வந்து அப்பா நான் தான் செல்ல குட்டின்னு சொல்லுவான். பொறுத்திருந்து பார்த்தல் தான் தெரியும் இன்னும் என்னவெல்லாம் பிரச்சனை இருக்குன்னு.

4 comments:
congrats suresh :)
மிக்க நன்றி Dhans
Great :)
We never expect this would be happening in our life unless we experience it.
Great :)
We never expect these will be happening in our life unless we experience it.
Post a Comment