Monday 29 October 2012

எறும்பும் யானையும் பகுதி -2

நான் கேட்ட, படித்த யானை எறும்பு பற்றிய நகைச்சுவையை ஒரு தொகுப்பாக கதை வடிவில் உங்களுடன் பகிர்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

அப்பு, குப்பி அறிமுகத்திற்கு பகுதி -1 படிக்கவும்.

அப்பு மிகுந்த மனச்சோர்வுடன் அருவியிலிருந்து நடந்து சென்றது, காட்டின் மையத்தில் அமைந்துள்ள புல்வெளி மைதானத்தை கடக்கும் பொது, அங்கே தூரத்தில் மான்கள் இரண்டு ஒன்றையொன்று துரத்தி விளையாடுவதை கண்டதும், அப்புவின் எண்ணங்கள் நிகழ்காலத்தை விட்டு இறந்த காலத்திற்கு சென்றது.

குப்பியை கண்ட நாள் முதல் ஒன்றா, இரண்டா அப்பு பட்ட அவமானங்கள் (எல்லாவற்றையும் ஒன்று ஒன்றாக சொல்கிறேன்)

அந்த மான்களை போல், அப்புவும் குப்பியும் ஓடி விளையாடா விட்டாலும் காடு முழுவதும் ஒன்றாக சுற்றி திரிந்தார்கள். இதனை யாரோ குப்பியின் அண்ணனிடம் (சுப்பி என்கிற எறும்பு) சொல்லி விட்டார்கள்.

அந்த ரோசகார சுப்பி தனது நண்பனான கொசு(mosquito) வை அழைத்து கொண்டு அப்புவை சந்தித்தது.

அப்பு:- என்ன சுப்பி எப்படி இருக்க

சுப்பி:- நான் நல்லாத்தான் இருக்கேன், உனக்குத்தான் நேரம் சரியில்லை, ஏன்டா என் தங்கச்சி குப்பி கூட சுத்துற.

அப்பு, எவ்வளவுதான் தாங்கள் நல்ல நண்பர்களாகத்தான் பழகுகிறோம் என்று மறுத்து சொல்லியும் சுப்பி ஏற்பதாக இல்லை. பேச்சி முற்றி சண்டையில் முடிந்தது.

அப்புவின் சின்ன சிலிர்ப்பில் துரம் பொய் விழுந்தது சுப்பி. அப்பொழுது கொசு பறந்து அப்புவின் தலையில் வந்தமர்ந்தது.

இந்த இடத்தில சுப்பி கொசுகிட்ட சொல்லுச்சி....

" மச்சான் அவனை விடாதே அப்புடியே அமுக்கி பிடி இதோ வரேன் "


:-இரண்டு விஷயம் சொல்லியாகனும்

- அப்போ நம்ம அப்புவோட மன நிலை எப்படி இருந்திருக்கும்!

-  நம்மீது நமக்கு நம்பிக்கை இருக்க வேண்டியது அவசியம் தான், ஆனால் இந்த அளவிற்கு இருப்பது கொஞ்சம் அதிகம் தான்

-தொடரும்





6 comments:

Dino LA said...

அருமை

NSK said...

மிக்க நன்றி மாற்றுபார்வை அவர்களே, உங்கள் வருகைக்கும், கருத்துக்கும்.

Unknown said...

கருத்துக்களும் கதைகளும் அருமை

Unknown said...

கருத்துக்களும் கதைகளும் அருமை

NSK said...

நன்றி திரு kavi Naga அவர்களே உங்கள் வருகைக்கும், கருத்துக்கும்

Unknown said...

nice