Thursday 18 October 2012

எறும்பும், யானையும் ( நகைச்சுவையா ?! )

ஒரு அடர்ந்த காடு....! அக்காட்டின் நடுவில் ஓர் அழகான அருவி ஓடிகொண்டிருந்தது..

அந்த அருவி வழிந்தோடும் பாதையில் இக்கதையின் நாயகன் அப்பு என்கிற யானை அமர்ந்து குளித்து கொண்டிருந்தது.


அப்பொழுது அவ்வழியே அப்புவின் பெண் சிநேகிதி (girl friend ) குப்பி என்கிற எறும்பு வந்து கொண்டிருந்தது.

அப்புவும் குப்பியும் நெருங்கிய நண்பர்களாக இருந்து காதலர்களாக மாறியவர்கள். அடிகடி அவர்கள் சண்டையிடுவதும் பிறகு சமாதானமாவதும் காடரிந்த செய்தி.

தூரத்தில் குப்பி வருவதை கண்டதும், அப்பு தனது விளையாட்டு தனத்தை நிறுத்திக்கொண்டு நல்ல பிள்ளையாக காட்சி அளித்தது. அருவி வழிந்தோடும் பாதை அருகே குப்பி வந்ததும், அப்புவை அழைத்தது.

அப்பு:- நான் குளித்து விட்டு வருகிறேன் சிறிது நேரம் பொறுத்திரு

குப்பி:- என் பொறுமையை சோதிக்காதே ஒழுங்கு மரியாதையா இப்போ வெளியே வரபோரியா இல்லையா..?

அப்பு:- (பொறுமைக்கும் பெண்களுக்கும் சம்பந்தமே இல்லை போல என்று மனதிற்குள் நினைத்துக்கொண்டு ) சரி சரி வரேன்...

அப்பு வெளியே வந்ததும்

குப்பி:- சரி, இப்ப நீ போய் குளி..

அப்பு:- கோப பார்வையுடன், என்னை பார்த்தா உனக்கு அவ்வளவு நக்கலாவா இருக்குது...?!

குப்பி:- இல்ல, குளியலறையில் காய போட்டிருந்த என் புது கோமணத்தை காணோம், அதான் நீ எடுத்து மாட்டிகிட்டியோன்னு பார்த்தேன்..!!

அப்பு:- உருவ வேற்றுமை (size difference ) பார்க்காம காதலிச்சது தப்பாயிருச்சோ..!

( தொடரும் )

5 comments:

Yaathoramani.blogspot.com said...

கதையும் சொல்லிப்போகும்
நீதியும் அருமை
மனம் கவர்ந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்

அருணா செல்வம் said...

நகைச்சுவைத் தொடரா...?
தொடங்குங்கள்.... தொடருகிறேன்.

NSK said...

திரு ரமணி மற்றும் அருணா செல்வம் அவர்களுக்கு, உங்கள் வருகைக்கும், கருத்திற்கும் நன்றி.

ஆர்.வி. ராஜி said...

நகைச்சுவைத் தொடர் அருமை. தொடர வாழ்த்துக்கள்.

NSK said...

மிக்க நன்றி ஆர்.வி. ராஜி உங்கள் கருத்துக்கும் வாழ்த்துக்கும்